மாணவர்கள் வாழ்வில் தேர்வு என்பது கடைசி போராட்டம் அல்ல: பிரதமர் மோடி பேச்சு..!

2021-04-07@ 20:01:10

டெல்லி: கொரோனாவால் மாணவர்களை நேரில் சந்திக்க முடியவில்லை எனவே, தற்போது உங்களை வீடியோ மூலம் சந்திக்கிறேன் என பிரதமர் மோடி பேசி வருகிறார். 'தேர்வுக்கு தயாராவோம்'' நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பிரதமர் மோடி பேசி வருகிறார். தேர்வு மட்டுமின்றி, தன்னம்பிக்கை ஊட்டும் விதமாகவும் பேசுவோம். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவதால், உண்மையான திறமை வெளிவருவதில்லை. தேர்வு என்பது மட்டும் வாழ்க்கை அல்ல, அளவுக்கு அதிகமாக யோசிப்பதால் தான் பயம் வருகிறது. மாணவர்கள் வாழ்வில் தேர்வு என்பது கடைசி போராட்டம் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.