அண்ணாநகர்: சென்னை நெற்குன்றம் சி.டி.என் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவா (57). இவரது மனைவி மகாலட்சுமி (52). நேற்று காலை தம்பதிக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த சிவா, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மகாலட்சுமிைய சரமாரியாக குத்தினார். இதில், படுகாயமடைந்த அவர், ரத்தவெள்ளத்தில் அங்கேயே சரிந்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மகாலட்சுமியை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மகாலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ப்பட்டு வருகிறது. இதனையடுத்து, சிவா தனது கத்தியுடன் கோயம்பேடு போலீசில் சரணடைந்தார். கத்தியை பறிமுதல் செய்த போலீசார் சிவாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.