ட்வீட் கார்னர்... என்னோட கப்பா!

2021-04-06@ 00:16:36

இந்திய அணி ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், கடந்த ஜனவரி 15ம் தேதி பிரிஸ்பேன், கப்பா மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அந்த போட்டியில் மொத்தம் 4 விக்கெட் கைப்பற்றியதுடன் 84 ரன் சேர்த்து திறமையை நிரூபித்தார். அந்த அறிமுக போட்டியின் நினைவாக தனது செல்ல நாய் குட்டிக்கு ‘கப்பா’ என்று பெயர் சூட்டியுள்ள அவர் சமூக வலைத்தளத்தில் அதை அறிமுகம் செய்யும் வகையில் பதிவிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.