உருமாறும் கொரோனாவை போல, தினம் தினம் மாறும் அதன் அறிகுறிகள்

கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,  சளி, காய்ச்சல், மூச்சுத் திணறல் தவிர, வேறு புதிய புதிய அறிகுறிகளும் இப்போது தோன்றுகின்றன. 

கோவிட்டின் (COVID) புதிய திரிபுடன், அறிகுறிகளில் காணப்படும் மாற்றங்கள் குறித்து நிபுணர்கள் விளக்கியுள்ளனர்

ஒருவருக்கு திடீரென்று பசி எடுக்காமல் இருப்பதும் பலவீனமாகவும் உணருவதும் கொரோனா தொற்றின் அறிகுறிகள் என நிபுணர்கள் கூறுகின்றனர். நீரிழிவு நோய் உள்ள ஒருவருக்கு இந்த அறிகுறிகள் இருந்தன. சோதித்து பார்த்ததில் அவருக்கு கொரொனா தொற்று உறுதியானதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதுபோன்ற மற்றொரு வழக்கில், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட 27 வயது இளைஞருக்கு கோவிட்  இருப்பது உறுதியானது. அதே போன்று 43 வயதான ஒருவருக்கு தொடர்ந்து விக்கல் ஏற்பட்டது.  பரிசோதனைகளில் அவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதுபோன்ற தகவல்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. 

ALSO READ | வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகுமா; இல்லை அழவும் வேண்டும்

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் கோவிட்  கண்காணிப்புக்கு பொறுப்பான டாக்டர் அனில் டோங்ரே, கோவிட் -19 இருந்தால், குளிர்-காய்ச்சல், மூச்சுத் திணறல், சுவை மற்றும் நறுமணம் ஆகிய குறைபாடுகள் ஆகிய அறிகுறிகள் இருந்தது. இப்போது உருமாறிய புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் தொடர்பான அறிகுறிகளில் மாற்றங்கள் காணப்படுகின்றன என்றார்.

சோர்வு, பலவீனம், உடல் வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் உள்ளவர்களுக்கு கோவிட் -19 உறுதியாகியுள்ளதால், உடலில் அசாதாரணமான நிலை எது ஏற்பட்டாலும், கொரோனாவை பரிசோதனை செய்து கொள்வது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர்

கோவிட் நோயிலிருந்து தப்பிக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, டாக்டர் அனில் கூறுகையில், மாஸ்க் அணிதல், சமூக இடவெளி போன்று, அரசு வெளியிட்டு அனைத்து  வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். இது தவிர, உடல் நலக் குறைவு ஏற்பட்டால், உடனே பரிசோதித்து கொள்ள வேண்டும். நீங்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், டாக்டரின் பரிந்துரைக்கு ஏற்ப செயல்படவும். வீட்டிலேயே ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு டாகடர்கள் பரிந்துரைத்தால், நன்றாக ஓய்வெடுத்து, ஏராளமான திரவங்களை உட்கொள்ளுங்கள். புரதம் மற்றும் பிற சத்தான உணவுகளை எடுத்துக் உட்கொள்ளுங்கள்.

ALSO READ | என்ன செய்தாலும் தொப்பை குறையவில்லையா; சுரைக்காய் ஜூஸ் குடித்தால் போதும்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Read More | https://zeenews.india.com/tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *