பெரம்பூர்: பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட எம்ஆர் நகர் சந்திப்பு அருகே நேற்று பறக்கும் படை அதிகாரிகள் நந்தகுமார் தலைமையில் போலீசார் மற்றும் அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்தவரை மடக்கி விசாரித்தபோது, அவர்களிடம் 15 கிலோ மாவா வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் அவரை கொடுங்கையூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சரத்குமார் (30) என்பதும் இவர் மீது ஏற்கனவே மாவா விற்றது தொடர்பாக பல்வேறு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட சரத்குமாரை நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.