சாமி 2 அசத்தும் விக்ரம் | கர்நாடகா - ரஜினி, கமலுக்கு எதிர்ப்பு, பிரகாஷ்ராஜ் பேசுவாரா ? | எதிர்ப்புக்கு பணிந்தார் கார்த்திக் சுப்பராஜ் | மெர்க்குரி ரிலீஸ் : கார்த்திக் சுப்பராஜுக்கு கடும் எதிர்ப்பு | காலா ரிலீஸ் தேதியை பயன்படுத்திக்கொண்ட வினீத் சீனிவாசன் | புருவ அழகியை சந்தித்த சித்தார்த் | ரிலீஸுக்கு முன்பே லாபம் சம்பாதித்து கொடுத்த ஜெயராம் படம் | முடிவுக்கு வந்தது நைஜீரியா நடிகரின் சம்பள பிரச்சனை | 3 மணி நேரத்தை தாண்டும் 'கம்மர சம்பவம்' | புடவைதான் பெண்களுக்கு அழகு, எமி ஜாக்சன் சொல்கிறார் |
டிஜிட்டல் கட்டண உயர்வை எதிர்த்து தமிழ் திரையுலகினர் கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகிறது. புதுப்படங்கள் வெளியாகவில்லை, படப்பிடிப்பு, அதுதொடர்பான மற்ற வேலைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் கோடிக்கணக்கில் நஷ்டமும், லட்சக்கணக்கான பேர் வேலையும் இழந்துள்ளனர்.
ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர அரசின் உதவியை நாடியிருக்கிறது திரையுலகம். இதுதொடர்பாக சினிமா துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று கடம்பூர் ராஜூவை, விஷால் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்து பேசினர். திரையுலகத்தில் நிலவி வரும் பிரச்னை குறித்து விரிவாக பேசினர்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால், தயாரிப்பாளர் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு 2 நாளில் ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.