கர்நாடகா - ரஜினி, கமலுக்கு எதிர்ப்பு, பிரகாஷ்ராஜ் பேசுவாரா ? | எதிர்ப்புக்கு பணிந்தார் கார்த்திக் சுப்பராஜ் | மெர்க்குரி ரிலீஸ் : கார்த்திக் சுப்பராஜுக்கு கடும் எதிர்ப்பு | காலா ரிலீஸ் தேதியை பயன்படுத்திக்கொண்ட வினீத் சீனிவாசன் | புருவ அழகியை சந்தித்த சித்தார்த் | ரிலீஸுக்கு முன்பே லாபம் சம்பாதித்து கொடுத்த ஜெயராம் படம் | முடிவுக்கு வந்தது நைஜீரியா நடிகரின் சம்பள பிரச்சனை | 3 மணி நேரத்தை தாண்டும் 'கம்மர சம்பவம்' | புடவைதான் பெண்களுக்கு அழகு, எமி ஜாக்சன் சொல்கிறார் | மீண்டும் 'சிங்கம்' - ஆஆஆ... அலற வைக்கும் ஹரி ? |
தனது புருவம் சிமிட்டல் மூலம் ரசிகர்களின் மனதை கொளையடித்தவர் தான் கேரளாவை சேர்ந்த புருவ அழகியான பிரியா பிரகாஷ் வாரியர். இவரை பிரபலமாக்கிய அந்தப்பாடல் இடம்பெற்ற 'ஒரு ஆதார் லவ்' என்கிற படம் இன்னும் வெளியாகத நிலையில் அவர் அடுத்து மலையாளம், தமிழ் ஆகியவற்றில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க இருக்கிறார் என தகவல் பரவி வருகிறது.
இந்தநிலையில் தான் பிரியா பிரகாஷுடன் இணைந்து தான் எடுத்த செல்பி ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் சித்தார்த். கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மலையாளத்தில் தான் நடித்துள்ள முதல் படமான 'கம்மார சம்பவம்' படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்காக கேரளா வந்து சென்றார் சித்தார்த்..
சரி கேரளா வந்ததுதான் வந்துவிட்டோம், அப்படியே ஒரு எட்டு புருவ அழகியையும் சந்தித்துவிட்டு போகலாம் என நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை.. இல்லை, ஒருவேளை தனது புதிய படத்தில் அவரை கதாநாயகியாக நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைக்காக பிரியா வாரியரை சந்தித்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.