கர்நாடகா - ரஜினி, கமலுக்கு எதிர்ப்பு, பிரகாஷ்ராஜ் பேசுவாரா ? | எதிர்ப்புக்கு பணிந்தார் கார்த்திக் சுப்பராஜ் | மெர்க்குரி ரிலீஸ் : கார்த்திக் சுப்பராஜுக்கு கடும் எதிர்ப்பு | காலா ரிலீஸ் தேதியை பயன்படுத்திக்கொண்ட வினீத் சீனிவாசன் | புருவ அழகியை சந்தித்த சித்தார்த் | ரிலீஸுக்கு முன்பே லாபம் சம்பாதித்து கொடுத்த ஜெயராம் படம் | முடிவுக்கு வந்தது நைஜீரியா நடிகரின் சம்பள பிரச்சனை | 3 மணி நேரத்தை தாண்டும் 'கம்மர சம்பவம்' | புடவைதான் பெண்களுக்கு அழகு, எமி ஜாக்சன் சொல்கிறார் | மீண்டும் 'சிங்கம்' - ஆஆஆ... அலற வைக்கும் ஹரி ? |
கடந்த இரண்டு - மூன்று வருடங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் ஜெயராம் நடித்த படங்களில் 'ஆடுபுலியாட்டம்' படம் தவிர மற்ற படங்கள் அனைத்தும் நஷ்டக்கணக்கையே காட்டியுள்ளன. மினிமம் கியாரண்டி ஹீரோவாக ஒரு காலத்தில் கோலோச்சியவரின் இன்றைய நிலை இதுதான் என்பது சோகம் கலந்த உண்மை.
இந்தநிலையில் தான் ஜெயராம் நடித்துவரும் 'பஞ்சவர்ண தாதா' என்கிற படம் போஸ்ட் புரொடக்சன் நிலையில் இருக்கும்போதே சுமார் 3.29 கோடி ரூபாய்க்கு இதன் சாட்டிலைட் ரைட்ஸை மழைவில் மனோரமா என்கிற சேனல் வாங்கியுள்ளது.. இது படத்தின் பட்ஜெட்டைவிட அதிமான தொகை என்கிறார்கள்.
திடீரென ஜெயராம் படத்திற்கு மவுசு வந்துவிட்டதா என நினைக்க வேண்டாம். இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ள ரமேஷ் பிஷரோடி என்பவர் அந்த சேனலில் ஆஸ்தான தொகுப்பாளராக, 'படாய் பங்களா' என்கிற நிகழ்சியை தொகுத்து வழங்கியவர்.. அந்த நட்பின் காரணமாகவே அவரது பட ரைட்ஸை ரிலீஸுக்கு முன்பே வாங்கிவிட்டதாம் சேனல் நிர்வாகம்.