மெர்க்குரி ரிலீஸ் : கார்த்திக் சுப்பராஜுக்கு கடும் எதிர்ப்பு | காலா ரிலீஸ் தேதியை பயன்படுத்திக்கொண்ட வினீத் சீனிவாசன் | புருவ அழகியை சந்தித்த சித்தார்த் | ரிலீஸுக்கு முன்பே லாபம் சம்பாதித்து கொடுத்த ஜெயராம் படம் | முடிவுக்கு வந்தது நைஜீரியா நடிகரின் சம்பள பிரச்சனை | 3 மணி நேரத்தை தாண்டும் 'கம்மர சம்பவம்' | புடவைதான் பெண்களுக்கு அழகு, எமி ஜாக்சன் சொல்கிறார் | மீண்டும் 'சிங்கம்' - ஆஆஆ... அலற வைக்கும் ஹரி ? | எதற்கும் வராத பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன் | சினிமா ஸ்டிரைக் - முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு : விஷால் |
இறைவி படத்தை அடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - மெர்குரி. பிரபுதேவா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் , 'மேயாத மான்' படத்தில் வைபவ்வின் தங்கையாக நடித்த இந்துஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
வசனம் இல்லாத சைலன்ட் மூவியான இந்தப் படம், த்ரில்லர் வகையைச் சார்ந்தது. இந்தப் படத்தில், முதலில் ஒரு கன்னட நடிகை நடிப்பதாக இருந்தது. வசனங்கள் இன்றி ரியாக்ஷன் மூலமாகவே நடிக்க வேண்டும் என்பதால், அவருக்கு நடிப்பு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், ஷூட்டிங் போக வேண்டிய கடைசிநேரத்தில் கன்னட நடிகையின் கால்ஷீட் கிடைக்கவில்லை. எனவே, தன்னுடைய தயாரிப்பில் உருவான மேயாதமான் படத்தில் நடித்த இந்துஜாவை மெர்குரி படத்தில் நடிக்க வைத்தார் கார்த்திக் சுப்பாராஜ்.
இவர் மட்டும் எவ்வித பயிற்சியும் இல்லாமலேயே மெர்குரி ஷூட்டிங்கில் கலந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.