எதற்கும் வராத பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன் | சினிமா ஸ்டிரைக் - முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு : விஷால் | அட்லீ சொன்ன தகவல் உண்மையா? | மெர்குரி-யில் இந்துஜா | மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஜோடிபோடும் மடோனா | அப்பா நடிகராகும் கார்த்திக் | வெப் சீரியல் இயக்கும் வி.இசட்.துரை | எல்லை மீறும் நடிகைகள் | மகேஷ்பாபுவுக்கு பலத்த அதிர்ச்சி | சிரஞ்சீவி படத்தில் இணைந்த விஜய் சேதுபதி பட நாயகி |
தெலுங்கில் ஒக்க மனசு, நல்ல கோச்சி உள்பட சில படங்களில் நடித்தவர் நிகாரிகா. தமிழில், விஜய் சேதுபதி - கவுதம் கார்த்திக் நடித்த, "ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்" படத்தில் நாயகியாக நடித்தார் . அதன்பிறகு தமிழில் அவருக்கு படமில்லை. தற்போது தெலுங்கில் ஹேப்பி வெட்டிங் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சிரஞ்சீவி நடித்து வரும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் நிகாரிகா. அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் ஒரு கீ ரோலில் நடிக்கிறேன். இந்த படம் என்னை முன்னணி நடிகையாக்கும். அதோடு, சினிமாவில் நுழைந்து சில ஆண்டுகளிலேயே சிரஞ்சீவி படத்தில் வாய்ப்பு கிடைத்திருப்பதை பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.