ஸ்ருதிஹாசன் ஒரு பக்கம் சாதனை, மறுபக்கம் படமில்லை ? | திலீப் ராட்சச நடிகன் : சித்தார்த் புகழாரம் | நான் சங்கி அல்ல ? - சீறிய நடிகை | விருது நடிகரிடம் சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட இயக்குனர் | பஹத் பாசில் பட நாயகியின் ஆசையை நிறைவேற்றிய மஞ்சு வாரியர் | மம்முட்டி வில்லனா..? ; இயக்குனர் விளக்கம் | மைத்துனரை சிபாரிசு செய்த சமந்தா | ஐபிஎல் துவக்க விழாவில் தமன்னா நடனம் | ஹே-ராம் உரிமையை வாங்கிய ஷாரூக்கான் | ஏ.ஆர்.ரகுமானை கிண்டல் செய்கிறாரா விக்னேஷ் சிவன்? |
தமிழில் மட்டுமல்ல தெலுங்கில் கூட வேறு எந்த நடிகையும் டுவிட்டரில் இவ்வளவு தொடர்பாளர்களை வைத்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஸ்ருதிஹாசனின் டுவிட்டர் தொடர்பாளர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தைக் கடந்துள்ளது.
ஆனாலும், ஸ்ருதிஹாசன் கைவசம் தற்போது தமிழ், தெலுங்கில் ஒரு படங்கள் கூட இல்லை என்பது தான் ஆச்சரியமான விஷயம். கடந்த ஒரு வருட காலமாகவே ஸ்ருதிஹாசன் எந்தப் படங்களிலும் நடிக்க சம்மதிக்கவில்லை. சமீபத்திலதான் வித்யுத் ஜமால் படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார்.
ஸ்ருதிஹாசன் கடைசியாக நடித்த தமிழ்ப் படம் கடந்த ஆண்டில் வெளிவந்த 'சி 3'. தெலுங்குப் படம் 'கட்டமராயுடு'. அப்பா கமல்ஹாசன் இயக்கத்தில் ஸ்ருதிஹாசன் நடித்து வந்த 'சபாஷ் நாயுடு', இனிமேலும் வளரும் என்று அவருக்கே நம்பிக்கை இருக்காது.
இவ்வளவு லட்சம் தொடர்பாளர்களை வைத்துக் கொண்டிருக்கும் ஸ்ருதிஹாசன் மனம் கவர்ந்த கதை ஒன்று கூடவா அவரைத் தேடிப் போகவில்லை.
இத்தனைக்கும் தமிழ், தெலுங்கில் பல சிறந்த இயக்குனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஸ்ருதியை தவிர்க்கிறார்களா அல்லது ஸ்ருதி அவர்களைத் தவிர்க்கிறாரா?. ஒருவேளை காதல், கல்யாணம் என்ற வதந்தி பரவியதும் ஒரு காரணமாக இருக்கலாம்.