திலீப் ராட்சச நடிகன் : சித்தார்த் புகழாரம் | நான் சங்கி அல்ல ? - சீறிய நடிகை | விருது நடிகரிடம் சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட இயக்குனர் | பஹத் பாசில் பட நாயகியின் ஆசையை நிறைவேற்றிய மஞ்சு வாரியர் | மம்முட்டி வில்லனா..? ; இயக்குனர் விளக்கம் | மைத்துனரை சிபாரிசு செய்த சமந்தா | ஐபிஎல் துவக்க விழாவில் தமன்னா நடனம் | ஹே-ராம் உரிமையை வாங்கிய ஷாரூக்கான் | ஏ.ஆர்.ரகுமானை கிண்டல் செய்கிறாரா விக்னேஷ் சிவன்? | திருச்சி உஷா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கி கமல் ஆறுதல் |
தெலுங்குத் திரையுலகத்தில் தற்போதுள்ள நடிகைகளில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து வைத்திருப்பவர் சமந்தா. சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த 'ரங்கஸ்தலம்' படத்தில் சமந்தா ஏற்று நடித்த ராமலட்சுமி கதாபாத்திரமும், ராம்சரண் ஏற்று நடித்த சிட்டிபாபு கதாபாத்திரமும் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் வெகுவாகப் பாராட்டப்பட்டு வருகிறது. படத்தை அந்த அளவிற்கு மிகவும் கவனமாகவும், டீடெய்லாகவும் சுகுமார் இயக்கியிருக்கிறார் என அவருக்குப் பாராட்டுக்கள் குவிகிறது. பல முன்னணி ஹீரோக்கள் அவர்களுடைய அடுத்த படத்திற்காக அவரை இப்போதே கூப்பிட ஆரம்பித்துவிட்டார்களாம்.
'ரங்கஸ்தலம்' படத்தில் நடித்தன் மூலம் இயக்குனர் சுகுமார் மனதிலும் நல்ல நடிகையாக இடம் பிடித்துவிட்டார் சமந்தா. இதைப் பயன்படுத்தி தன்னுடைய கணவர் நாகசைதன்யாவின் தம்பி அகிலுக்காக சிபாரிசு செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அகில் நாயகனாக நடித்த 'அகில், ஹலோ' ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியடைந்துவிட்டன. இத்தனைக்கும் இரண்டு படங்களையும் முன்னணி இயக்குனர்கள்தான் இயக்கினார்கள். 'ரங்கஸ்தலம்' படத்தில் சுகுமாரின் திறமையைப் பார்த்த சமந்தா, தன் மைத்துனருக்காக இயக்குனர் சுகுமாரிடம் பேசியிருக்கிறாராம். அகிலை வைத்து ஒரு படத்தை இயக்கித் தாருங்கள் என்று கேட்டிருக்கிறார் என்கிறார்கள். பல பெரிய ஹீரோக்களே அழைக்கும் நிலையில் அகிலுக்காக சமந்தாவின் அழைப்பை சுகுமார் ஏற்பது சந்தேகம் என்கிறார்கள்.