விஷாலுக்கு புதுக் குடைச்சல் | அறம்-2 என்ன கதை? | மத்திய அரசின் எடுபிடியாக தமிழக அரசு : கமல் | ரூ.250 கோடி பட்ஜெட்டில் ராஜமவுலி படம் | விஜய்க்கு உருவான கதையில் அல்லு அர்ஜூன் | ஏப்ரல் 8 முதல் தெலுங்கு படங்கள் தமிழகத்தில் வெளியாகாது | தமிழில் வாய்ப்பு தேடும் கன்னட நடிகை | திட்டம்போட்டு திருடுற கூட்டத்தை வாங்கியது லிப்ரா | பர்ஹான் அக்தரை தென்னிந்தியாவுக்கு அழைத்து வந்த தேவி ஸ்ரீபிரசாத் | தனுஷ் மீது மேலூர் தம்பதிகள் மீண்டும் வழக்கு |
நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்றும், அவர் எங்களுக்கு மாதம்தோறும் வாழ்க்கைக்கான செலவு தொகை வழங்க வேண்டும் என்று மதுரை அருகே உள்ள மேலூரைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதிகள் வழக்கு தொடர்ந்தனர். பல ஆண்டுகள் நடந்த வந்த இந்த வழக்கை மதுரை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கில் தனுஷ் தாக்கல் செய்த பிறப்பு மற்றும் கல்விச் சான்றுகள் போலியானவை என்று மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் கதிரேசன் தம்பதிகள் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் மதுரை கோ.புதூர் காவல் நிலையம் மற்றும் மதுரை போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.