திலீப் ராட்சச நடிகன் : சித்தார்த் புகழாரம் | நான் சங்கி அல்ல ? - சீறிய நடிகை | விருது நடிகரிடம் சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட இயக்குனர் | பஹத் பாசில் பட நாயகியின் ஆசையை நிறைவேற்றிய மஞ்சு வாரியர் | மம்முட்டி வில்லனா..? ; இயக்குனர் விளக்கம் | மைத்துனரை சிபாரிசு செய்த சமந்தா | ஐபிஎல் துவக்க விழாவில் தமன்னா நடனம் | ஹே-ராம் உரிமையை வாங்கிய ஷாரூக்கான் | ஏ.ஆர்.ரகுமானை கிண்டல் செய்கிறாரா விக்னேஷ் சிவன்? | திருச்சி உஷா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கி கமல் ஆறுதல் |
பிரபல சினிமா தயாரிப்பாளர் சக்தி சிதம்பரம் வீட்டுக்கு அதிகாலையில் வந்த மணலி போலீசார், திடுமென அவரை குண்டு கட்டாக மணலி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். பிரபல பைனான்சியர் குந்தஷா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஜெயிக்கிற குதிரை என்ற படம் எடுப்பதற்காக கொடுக்கப்பட்ட 35 லட்ச ரூபாய் பணத்தை, சக்தி சிதம்பரம் திருப்பிக் கொடுக்கவில்லை என்ற காரணத்துக்காக, அவரை போலீசார் அழைத்துச் சென்றனர்.
இந்த பிரச்னையை, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷாலிடம் கொண்டு சென்றனர். ஏற்கனவே இந்த பிரச்னை தொடர்பாக தயாரிப்பாளர் கவுன்சில் விசாரித்துக் கொண்டிருக்கும் நிலையில், போலீஸ் இதில் எப்படி தலையிடலாம் என்று மட்டும் கேட்டவர், மேற்கொண்டு, சக்தி சிதம்பரத்துக்காக எதையுமே செய்யவில்லை. இதனால், விஷால் மீது கோபம் கொண்ட சக்தி சிதம்பரம் ஆதரவாளர்கள், பிரச்னையை, விஷாலுக்கு எதிர்ப்பாக இருக்கும் நடிகர் ரித்திஷுக்கு பிரச்னையை கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து, அவர், இந்த பிரச்னையை கையில் எடுத்து, விஷாலுக்கு குடைச்சல் கொடுக்க துவங்கி உள்ளார்.