ஹே-ராம் உரிமையை வாங்கிய ஷாரூக்கான் | ஏ.ஆர்.ரகுமானை கிண்டல் செய்கிறாரா விக்னேஷ் சிவன்? | திருச்சி உஷா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கி கமல் ஆறுதல் | விஷாலுக்கு புதுக் குடைச்சல் | அறம்-2 என்ன கதை? | மத்திய அரசின் எடுபிடியாக தமிழக அரசு : கமல் | ரூ.250 கோடி பட்ஜெட்டில் ராஜமவுலி படம் | விஜய்க்கு உருவான கதையில் அல்லு அர்ஜூன் | ஏப்ரல் 8 முதல் தெலுங்கு படங்கள் தமிழகத்தில் வெளியாகாது | தமிழில் வாய்ப்பு தேடும் கன்னட நடிகை |
கமல்ஹாசன் நடித்த படங்களில் முக்கியமான ஒன்று 'ஹே ராம்'. 2000ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தப் படம் தமிழ், ஹிந்தி இரு மொழிகளில் எடுக்கப்பட்டது. கமல்ஹாசன் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் கமல்ஹாசன், ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஹேமமாலினி, அதுல் குல்கர்னி, நஸ்ருதீன் ஷா, சௌரப் சுக்லா என பல ஹிந்தி நடிகர்களும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். சுதந்திரத்திற்கு முன் நடக்கும் கதையாக உருவான இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றது. அதே சமயம் சாதாரண ரசிகர்களுக்குப் படம் புரியவில்லை என்ற விமர்சனத்தையும் கொடுத்தது.
இப்படத்தை 18 வருடங்கள் கழித்து மீண்டும் 'ரீமேக்' செய்யும் உரிமையை படத்தில் நடித்த ஷாரூக்கான் வாங்கியுள்ளார். பீரியட் படம் என்பதால் எந்தக் காலத்திலும் இந்தப் படத்தைத் தயாரித்து வெளியிடலாம். இப்பட உரிமையை ஷாரூக்கான் வாங்கியிருப்பதை கமல்ஹாசனே சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார். அப்போது 'ஹே ராம்' படத்தில் நடித்ததற்காக ஷாரூக் கானுக்கு அவர் ஒரு கைக்கெடிகாரம் ஒன்றைத்தான் சம்பளமாக வழங்கினாராம். அப்போது தன்னிடம் பணமே இல்லை என்பதையும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அப்படம் பற்றிய நல்ல நினைவுகள் ஷாரூக்கிடம் இருக்கும் என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
ஷாரூக்கான் 'ஹேராம்' படத்தை எப்போது ரீமேக் செய்யப் போகிறார் என்பது பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகலாம்.