ஏப்ரல் 8-ல் ஒட்டுமொத்த திரையுலகமும் போராட்டம் | ஸ்ருதிஹாசன் ஒரு பக்கம் சாதனை, மறுபக்கம் படமில்லை ? | திலீப் ராட்சச நடிகன் : சித்தார்த் புகழாரம் | நான் சங்கி அல்ல ? - சீறிய நடிகை | விருது நடிகரிடம் சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட இயக்குனர் | பஹத் பாசில் பட நாயகியின் ஆசையை நிறைவேற்றிய மஞ்சு வாரியர் | மம்முட்டி வில்லனா..? ; இயக்குனர் விளக்கம் | மைத்துனரை சிபாரிசு செய்த சமந்தா | ஐபிஎல் துவக்க விழாவில் தமன்னா நடனம் | ஹே-ராம் உரிமையை வாங்கிய ஷாரூக்கான் |
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஸ்டெர்லைட் பிரச்னைக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் வருகிற ஏப்., 8-ம் தேதி போராட்டம் அறிவித்துள்ளது. இந்தப்போராட்டத்தில் ஒட்டுமொத்த திரைத்துறையும் பங்கேற்பதாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி, விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து ஏப்ரல் 8-ல் காலை 9 மணி முதல் 1 மணி வரை சென்னை, வள்ளூவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன அறவழி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
தமிழக விவசாயிகளின் வாழ்வை தீர்மானிக்கும் முக்கிய பிரச்னையாக இருப்பதாலும், சூற்றுச்சூழலை காக்கின்ற பெரும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருப்பதினாலும் இந்த போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.