ஹே-ராம் உரிமையை வாங்கிய ஷாரூக்கான் | ஏ.ஆர்.ரகுமானை கிண்டல் செய்கிறாரா விக்னேஷ் சிவன்? | திருச்சி உஷா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கி கமல் ஆறுதல் | விஷாலுக்கு புதுக் குடைச்சல் | அறம்-2 என்ன கதை? | மத்திய அரசின் எடுபிடியாக தமிழக அரசு : கமல் | ரூ.250 கோடி பட்ஜெட்டில் ராஜமவுலி படம் | விஜய்க்கு உருவான கதையில் அல்லு அர்ஜூன் | ஏப்ரல் 8 முதல் தெலுங்கு படங்கள் தமிழகத்தில் வெளியாகாது | தமிழில் வாய்ப்பு தேடும் கன்னட நடிகை |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இடம் பெற்ற 'சொடக்கு...' பாடலின் லிரிக் வீடியோ, 'மெர்சல்' படத்தில் இடம் பெற்ற 'ஆளப் போறான் தமிழன்....' பாடலை விட பார்வைகள் எண்ணிக்கையைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. அதனால், நேற்று ரசிகர்களுக்கும், படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்த விக்னேஷ் சிவன் தேவையில்லாமல் ஏ.ஆர்.ரகுமானை நக்கலடிப்பது போன்று டுவீட் செய்திருக்கிறார்.
நன்றி தெரிவித்து அவர் பதிவிட்ட டுவீட்டில், 'எல்லாப்புகழும் சூர்யா மற்றும் அனிருத்திற்கே' என பதிவிட்டிருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் எந்த சாதனை புரிந்தாலும் 'எல்லாப்புகழும் இறைவனுக்கே' என சொல்வது வழக்கம். அதைக் கிண்டலடிக்கும் விதமாக விக்னேஷ் சிவன் பதிவிட்டிருப்பது ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்களைக் கோபமடைய வைத்துள்ளது.