திலீப் ராட்சச நடிகன் : சித்தார்த் புகழாரம் | நான் சங்கி அல்ல ? - சீறிய நடிகை | விருது நடிகரிடம் சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட இயக்குனர் | பஹத் பாசில் பட நாயகியின் ஆசையை நிறைவேற்றிய மஞ்சு வாரியர் | மம்முட்டி வில்லனா..? ; இயக்குனர் விளக்கம் | மைத்துனரை சிபாரிசு செய்த சமந்தா | ஐபிஎல் துவக்க விழாவில் தமன்னா நடனம் | ஹே-ராம் உரிமையை வாங்கிய ஷாரூக்கான் | ஏ.ஆர்.ரகுமானை கிண்டல் செய்கிறாரா விக்னேஷ் சிவன்? | திருச்சி உஷா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கி கமல் ஆறுதல் |
பஹத் பாசில் கதாநாயகனாக நடித்து சில மாதங்களுக்கு முன் வெளியான படம் 'தொண்டிமுதலும் த்ரிக்சாட்சியும்'. இந்தப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நிமிஷா சஜயன். இந்தப்படத்திற்கு முன்பே மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்த 'கேர் ஆப் சாயிராபானு' என்கிற படத்தில் சிறிய வேடத்தில் நடித்ததன் மூலம் அவருடன் நட்பை தொடர்ந்து வருகிறார் நிமிஷா.
இந்தநிலையில் மோகன்லால் மஞ்சு வாரியர் இணைந்து நடிக்கும் 'ஒடியன்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடப்பதை கேள்விப்பட்ட நிமிஷா சஜயன், மஞ்சு வாரியரிடம் மோகன்லாலை சந்திக்க வேண்டும் என்கிற தனது நீண்டநாள் ஆசையை வெளிப்படுத்தினார். காரணம் நிமிஷா மோகன்லாலின் தீவிர ரசிகையாம்.
மஞ்சு வாரியரும் நிமிஷாவை வரவழைத்து மோகன்லாலுடன் சந்திக்க வைத்துள்ளார். கதாநாயகியாக தற்போது இரண்டு படங்களில் நடித்துவரும் நிமிஷா, மோகன்லால் முன் ஒரு ரசிகையாக மாறிப்போய் விட்டாராம். “அந்த தருணத்தை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை” என்கிறார் சிலாகிப்புடன்.