திலீப் ராட்சச நடிகன் : சித்தார்த் புகழாரம் | நான் சங்கி அல்ல ? - சீறிய நடிகை | விருது நடிகரிடம் சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட இயக்குனர் | பஹத் பாசில் பட நாயகியின் ஆசையை நிறைவேற்றிய மஞ்சு வாரியர் | மம்முட்டி வில்லனா..? ; இயக்குனர் விளக்கம் | மைத்துனரை சிபாரிசு செய்த சமந்தா | ஐபிஎல் துவக்க விழாவில் தமன்னா நடனம் | ஹே-ராம் உரிமையை வாங்கிய ஷாரூக்கான் | ஏ.ஆர்.ரகுமானை கிண்டல் செய்கிறாரா விக்னேஷ் சிவன்? | திருச்சி உஷா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கி கமல் ஆறுதல் |
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மலையாளத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'ஷட்டர்' படத்தை தொடர்ந்து இயக்குனர் ஜாய் மேத்யூ மம்முட்டிக்காக எழுதிய' கதை தான் 'அங்கிள்'. இந்தப்படத்தை கிரீஷ் தாமோதர் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
17 வயது இளம்பெண் மற்றும் அவளது தந்தையின் நண்பர் என்கிற இரண்டு கதாபாத்திரங்களை மையப்படுத்தி இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த இளம்பெண்ணாக கார்த்திகா முரளிதரன் நடிக்க, அவரது தந்தையின் நண்பராக மம்முட்டி நடித்துள்ளாராம். மூன்றாவது முறையாக மம்முட்டியுடன் ஜோடி சேர்ந்துள்ள ஆஷா சரத், இந்தப்படத்தில் அவரது மனைவி கேரக்டரில் நடிக்கிறார்.
இந்தப்படத்தில் மம்முட்டி நெகடிவ் ரோலில் நடித்துள்ளார் என சொல்லப்படுகிறது. இதுகுறித்து இயக்குனரிடம் கேட்டால், படம் பார்க்கும் ரசிகர்களே மம்முட்டியின் கேரக்டரை முடிவுசெய்து கொள்ளட்டும் என சஸ்பென்ஸ் வைக்கிறாராம்.