திலீப் ராட்சச நடிகன் : சித்தார்த் புகழாரம் | நான் சங்கி அல்ல ? - சீறிய நடிகை | விருது நடிகரிடம் சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட இயக்குனர் | பஹத் பாசில் பட நாயகியின் ஆசையை நிறைவேற்றிய மஞ்சு வாரியர் | மம்முட்டி வில்லனா..? ; இயக்குனர் விளக்கம் | மைத்துனரை சிபாரிசு செய்த சமந்தா | ஐபிஎல் துவக்க விழாவில் தமன்னா நடனம் | ஹே-ராம் உரிமையை வாங்கிய ஷாரூக்கான் | ஏ.ஆர்.ரகுமானை கிண்டல் செய்கிறாரா விக்னேஷ் சிவன்? | திருச்சி உஷா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கி கமல் ஆறுதல் |
கடந்த 2௦17ஆம் வருடத்திற்கான கேரள அரசின் சிறந்த நடிகர் விருது முக்கிய நடிகர்கள் யாருக்கும் கிடைக்காமல் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான இந்திரன்ஸ் என்பவருக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த விருதுக்கு இவர் தகுதியானவர் அல்ல என சர்ச்சையான கருத்துக்களை கூறியுள்ளார் 'செக்ஸி துர்கா' பட இயக்குனர் சணல் குமார் சசிதரன். எப்போதும் சர்ச்சை கருத்துக்களால் சிக்கலை இழுத்துக் கொள்ளும் இவர், சமீபத்தில் ஒரு பேட்டியின்போது இப்படி சொல்லப்போக, அவர் மீது கண்டனங்கள் தொடர்ந்து பாய்ந்த வண்ணம் இருக்கின்றன.
ஆனால் உடனே, தான் கூறிய கருத்துக்காக நடிகர் இந்திரன்சிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் சணல்குமார் சசிதரன். மேலும் தான் இந்திரன்ஸ் பற்றி குறைவாக எதுவும் சொல்லவில்லை என்றும், தான் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என்றும் விளக்கம் கூறியுள்ளார்.