பர்ஹான் அக்தரை தென்னிந்தியாவுக்கு அழைத்து வந்த தேவி ஸ்ரீபிரசாத் | தனுஷ் மீது மேலூர் தம்பதிகள் மீண்டும் வழக்கு | இயக்குனர் சக்தி சிதம்பரம் மீது மோசடி புகார் | உண்ணாவிரதத்தில் நம்பிக்கை இல்லை : கமல் | 2.0 படத்தில் ஐஸ்வர்யா ராய்? | சில்க்காக டெலிவரி பாயான நட்டி | ஜேம்ஸ் வசந்தனின் வித்தியாசமான யோசனை | தெலுங்குக்கு செல்கிறார் அட்லி | சிவகார்த்திகேயன் படம் : சாய் பல்லவி சந்தேகம் | ஜூலையில் சங்கமித்ரா படப்பிடிப்பு? |
பாலிவுட்டின் முன்னணி இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்திறமைக் கொண்டவர் பர்ஹான் அக்தர். இவர் முதன் முதலில் தென்னிந்திய மொழியில் தயாரான 'பரத் அனே நேனு' என்ற திரைப்படத்தில் பின்னணி பாடியிருக்கிறார். இவரை பாட வைத்தது இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
பர்ஹான் அக்தரை 3 ஆண்டுகளுக்கு முன் ஒரு விருது வழங்கும் விழாவில் சந்தித்தேன். அப்போது அவர் என்னுடைய இசையில் வெளியான ஹிந்தி பாடல்களைப் பற்றி பேசினார். அதேப்போல் நானும் 'ராக் ஆன் ' என்ற படத்தில் அவர் பாடிய பாடல் என்னை மிகவும் கவர்ந்த பாடல் என்றும், உங்களது குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொன்னேன். அத்துடன் நீங்கள் ஏன் தென்னிந்திய மொழிகளில் பாடக்கூடாது? என்று கேட்டேன். அதற்கு அவர் எனக்கு விருப்பம் இருந்தாலும் எனக்கு தென்னிந்திய மொழிகளான தெலுங்கோ, தமிழோ சுத்தமாக தெரியாதே..? என்று பதிலளித்தார்.
உங்களுக்கு என்னுடைய குரலினிமை மீது நம்பிக்கை இருந்தால் நான் முயற்சி செய்கிறேன். நன்றாக இருந்தால் வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நீக்கிவிடுங்கள் என்றார். அப்போது நான் அவருக்கு மொழி உச்சரிப்பு ஆகியவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களுடைய குரலுக்கு ஏற்ற வகையில் பாடல்கள் அமைந்தால் நீங்கள் தான் பாடவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதற்கு சரியென்று ஒப்புக்கொண்டார்.
முதலில் சுகுமார் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் தயாரான '1 நேநோக்கடுனே' என்ற படத்தில் இடம்பெற்ற 'Who are you....' என்ற பாடலைத்தான் பர்ஹான் அக்தர் பாடுவதாகயிருந்தது. ஆனால் போதிய கால அவகாசம் இல்லாததால் அவரால் பாட இயலவில்லை. அதனையடுத்து தற்போது மகேஷ் பாபு நடிப்பில் 'பாரத் அனே நேனு ' என்ற படத்தில் இடம்பெற்ற 'I Dont Know...' எனத் தொடங்கும் பாடலை பர்ஹான் பாடினால் நன்றாக இருக்கும் என்று அவரைத் தொடர்பு கொண்டேன். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு பாடுகிறேன் என்றார். இருந்தாலும் அவர் தெலுங்கு மொழி உச்சரிப்பைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டேயிருந்தார். ஆனால் மும்பையில் இந்த பாடலை பதிவு செய்யும் போது அற்புதமாக பாடிக் கொடுத்தார்.
இந்த பாடலை கேட்டவர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி. பர்ஹான் அக்தர் எப்படி தெலுங்கு மொழியை கச்சிதமாக உச்சரித்து இனிமையாக பாடியிருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டனர். இதுவே இந்த பாடலுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறது. கடந்த வாரம் இந்த பாடல் இணையத்தில் வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கில் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. பர்ஹான் அக்தருடனான இந்த இசைப்பயணம் மேலும் தொடரும்' என்றார்.