மத்திய அரசின் எடுபிடியாக தமிழக அரசு : கமல் | ரூ.250 கோடி பட்ஜெட்டில் ராஜமவுலி படம் | விஜய்க்கு உருவான கதையில் அல்லு அர்ஜூன் | ஏப்ரல் 8 முதல் தெலுங்கு படங்கள் தமிழகத்தில் வெளியாகாது | தமிழில் வாய்ப்பு தேடும் கன்னட நடிகை | திட்டம்போட்டு திருடுற கூட்டத்தை வாங்கியது லிப்ரா | பர்ஹான் அக்தரை தென்னிந்தியாவுக்கு அழைத்து வந்த தேவி ஸ்ரீபிரசாத் | தனுஷ் மீது மேலூர் தம்பதிகள் மீண்டும் வழக்கு | இயக்குனர் சக்தி சிதம்பரம் மீது மோசடி புகார் | உண்ணாவிரதத்தில் நம்பிக்கை இல்லை : கமல் |
மக்கள் நீதி மையத்தின் மாநாடு திருச்சியில் நடக்கிறது. இதற்காக அங்கு சென்றுள்ள கமல், செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது....
மக்கள் நீதி மையம் பிப்.22 அன்றே திருச்சி பொதுக்கூட்டம் பற்றி அறிவித்திருந்தது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புப்படி 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என நம்பிக்கையுடன் இருந்தோம் நாங்கள். ஆனால் ஏற்கனவே 2016-ல் நிகழ்ந்த நிகழ்வுகள் நியாபகம் வருகின்றன. அப்போது 4 வாரத்திற்குள் மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது. அப்போதும் நுணுக்கங்களை தயாரித்து சாக்குபோக்கு சொல்லி தாமதிக்கப்பட்டது. இப்போதும் அதே நாடகம் அரங்கேறுகிறது.
காவிரி வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை. ஆனால், தமிழக அரசு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோ, போலியான ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தோ தனது இயாலாமையை மறைக்க முடியாது. மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்காமல் மத்திய அரசின் எடுபிடி போல் நடக்கிறது தமிழக அரசு. இந்த நிகழ்வுகளினால் எங்கள் பொதுக்கூட்டம் இன்று காவிரி பிரச்னை குறித்து முக்கியமாக விவாதிக்கும். பிரச்னைகள் மட்டும் பேசாமல் தீர்வுகளுக்கான வழிகளையும் முன்னிறுத்தும்.
இதுவரை நடந்த எங்களின் ஆய்வுபடி முக்கிய துறைகளில் மையத்தின் கொள்கைகளுக்கான கோட்பாடு அறிவிக்கப்படும். இதனை மையமாக வைத்து அடுத்த 5 மாதங்களில் எங்களின் முழு கொள்கைகளும் தயாரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.