உண்ணாவிரதத்தில் நம்பிக்கை இல்லை : கமல் | 2.0 படத்தில் ஐஸ்வர்யா ராய்? | சில்க்காக டெலிவரி பாயான நட்டி | ஜேம்ஸ் வசந்தனின் வித்தியாசமான யோசனை | தெலுங்குக்கு செல்கிறார் அட்லி | சிவகார்த்திகேயன் படம் : சாய் பல்லவி சந்தேகம் | ஜூலையில் சங்கமித்ரா படப்பிடிப்பு? | ஆணாதிக்கத்திற்கு எதிரான பெண்ணாக ஜோதிகா! | மம்முட்டியின் கை வண்ணத்தில் | 'கம்மார சம்பவம்' ஆடியோவை வெளியிட்ட நிவின்பாலி |
திலீப், சித்தார்த் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் கம்மார சம்பவம்'. ரதீஷ் அம்பாட் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். நடிகை வழக்கில் சிக்கி திலீப் சிறை செல்வதற்கு முன் ஆரம்பித்த இந்தப்படம் இப்போதுதான் ஒருவழியாக ஷூட்டிங் முடிந்துள்ளது. தற்போது போஸ்ட் புரடக்சனில் இறுதிக்கட்டத்தில் இருக்கும் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது..
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிவின்பாலி, இந்தப்படத்தின் ஆடியோவை வெளியிட்டார். படத்தில் நடித்துள்ள சித்தார்த், நமீதா பிரமோத், சன்னி வெய்ன் உள்ளிட்ட நடிகர்களை தவிர பெரிய நட்சத்திர கூட்டம் எதுவும் இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.