காவிரி, ஸ்டெர்லைட் : நடிகர் சங்கமும் போராட்டம் | தொடரும் பன்னீர்செல்வம், செல்வமணி மோதல் | பதிலடி கொடுக்காத ரஜினிகாந்த், கமல்ஹாசன் | மானை வலையில் சிக்க வைத்த புயல் | சிவகார்த்திகேயன் படத்தில் கருணாகரன் | அட்லீயின் பிலீங்ஸ் | விக்ரம் படம் : ஸ்ருதிக்கு பதில் அக்ஷ்ரா | அனிருத் சொன்னது உண்மையா ? | காளி-யை நம்பும் அம்ரிதா | ரசூல் பூக்குட்டியிடம் ஆலோசனைப் பெற்ற ராஜிவ் மேனன் |
காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் என தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் வலுத்து வருகின்றன. அரசியல் கட்சியினர், வணிகர்கள் என பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விஷயத்தில் திரையுலகினரும் போராட்ட களத்தில் குதிக்கின்றனர். இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...
"தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் மற்றும் காவிரி மேலாண்மை வாரியம், மத்திய அரசு உடனடியாக அமைக்க கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 08.04.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1மணி வரை கண்டன அறவழி போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது. இந்த கண்டன அறவழி போராட்டத்தில் திரைப்பட துறையை சார்ந்த அனைவரும் பங்கேற்குமாறு வேண்டுகிறோம்".
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.