திருப்பதி : ''திருமலை ஏழுமலையான் நிதியில், 4,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக கூறியது தவறு. அவ்வாறு எந்த முறைகேடும் நடக்கவில்லை,'' என, தேவஸ்தான செயல் அதிகாரி, அனில் குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.
திருப்பதி, திருமலை ஏழுமலையானுக்கு, பக்தர்கள் வழங்கும் காணிக்கைகள், தங்க நகைகள் உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் கணக்கிட்டு, வங்கியில் முதலீடு செய்து வருகிறது. தற்போது, தேவஸ்தானம், 9,800 கோடி ரூபாயை, பல வங்கிகளில், முதலீடு செய்துள்ளது.
இந்நிலையில், தேவஸ்தான அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், 4,000 கோடி ரூபாய் வங்கியில் முதலீடு செய்வதில், முறைகேடு நடந்திருப்பதாகவும் புகார் எழுந்தது. இதை, தேவஸ்தான செயல் அதிகாரி, அனில் குமார் சிங்கால் மறுத்துள்ளார்.
அவர் கூறியதாவது: ஏழுமலையான் வருமானத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தும் பணிகள் எதையும், அதிகாரிகள் செய்ய மாட்டோம். வங்கிகளில் செய்யப்பட்ட முதலீடுகளில், எந்த முறைகேடும் நடக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து