உண்ணாவிரதத்தில் நம்பிக்கை இல்லை : கமல் | 2.0 படத்தில் ஐஸ்வர்யா ராய்? | சில்க்காக டெலிவரி பாயான நட்டி | ஜேம்ஸ் வசந்தனின் வித்தியாசமான யோசனை | தெலுங்குக்கு செல்கிறார் அட்லி | சிவகார்த்திகேயன் படம் : சாய் பல்லவி சந்தேகம் | ஜூலையில் சங்கமித்ரா படப்பிடிப்பு? | ஆணாதிக்கத்திற்கு எதிரான பெண்ணாக ஜோதிகா! | மம்முட்டியின் கை வண்ணத்தில் | 'கம்மார சம்பவம்' ஆடியோவை வெளியிட்ட நிவின்பாலி |
கடந்த பத்து வருடங்களுக்குள் வெளியான மம்முட்டியின் படங்களை பார்த்தவர்களிடம், மம்முட்டிக்கு ஏற்ற பாந்தமான ஜோடி யார் என்று கேட்டால் பலரது பதில் நடிகை ராய் லட்சுமி என்பதாகத்தான் இருக்கும். மற்ற மொழிகளை விட, மலையாள படங்களில் நடிக்கும்போது ராய் லட்சுமி தனித்து தெரிந்தாலும், மம்முட்டிக்கு ஜோடியாக நடித்த படங்களில் ஜாடிக்கேத்த மூடி என சொல்லும் விதமாக இவர்களது ஜோடிப்பொருத்தம் அமைந்திருக்கும்..
அந்தவகையில் ஏற்கனவே 'அண்ணன் தம்பி, பருந்து', 'சட்டம்பி நாடு', 'ராஜாதி ராஜா' என நான்கு படங்களில் அடுத்தடுத்து இணைந்து நடித்த இருவரும் இப்போது ஐந்தாவது முறையாக 'ஒரு குட்டநாடன் பிளாக்' என்கிற படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். குட்டநாடு பகுதியில் நடைபெற்று வரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் தற்போது கலந்துகொண்டு நடித்து வருகிறார் ராய் லட்சுமி..
பிரபல கதாசிரியரான சேது, இயக்குனராக அறிமுகமாகும் இந்தப்படத்தில் ராய் லட்சுமியுடன் அனு சித்தாரா, பூர்ணா என இன்னும் இரண்டு கதாநாயகிகளும் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.