சென்னை : மத்திய அரசுக்கு எதிராக, தமிழகத்தில் போராட்டம் வலுத்து வரும் நிலையில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், நேற்று டில்லி புறப்பட்டு சென்றது, பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க
வலியுறுத்தியும், தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆளும் கட்சியான அ.தி.மு.க., சார்பில், இன்று மாவட்ட தலைநகரங்களில், உண்ணாவிரதம் நடைபெற உள்ளது. வியாபாரிகள், கடையடைப்பு செய்கின்றனர். எதிர்க்கட்சிகள், வரும், 5ல், 'பந்த்' நடத்த அழைப்பு விடுத்துள்ளன.
இதையடுத்து, தலைமைச் செயலர், கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலர், நிரஞ்சன் மார்டி மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம், சட்டம் ஒழுங்கு குறித்து, கவர்னர், பன்வாரிலால் புரோஹித் கேட்டறிந்தார். நேற்று, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, புதுச்சேரி கவர்னர், கிரண்பேடி, பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இந்நிலையில், கவர்னர், பன்வாரிலால் புரோஹித், நேற்று இரவு, 7:20 மணி விமானத்தில், டில்லி சென்றார். அவர், காவிரி பிரச்னையில், தமிழகத்தில் வெடித்துள்ள போராட்டங்கள் குறித்து, மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (5+ 19)
Reply
Reply
Reply
Reply
Reply