'கம்மார சம்பவம்' ஆடியோவை வெளியிட்ட நிவின்பாலி | மேகா ஆகாஷுக்கு தனுஷ் வாங்கித்தந்த மோசமான ஐஸ்கிரீம் | மம்முட்டி பட ஷூட்டிங்கில் இணைந்தார் ராய் லட்சுமி | கழுதை குளியல் - ஒட்டக சவாரி : அசத்தும் ஜெயராம் | யுவன் ஷங்கர் ராஜாவின் கார் திருடப்பட்டதா? | காவிரி, ஸ்டெர்லைட் : நடிகர் சங்கமும் போராட்டம் | தொடரும் பன்னீர்செல்வம், செல்வமணி மோதல் | பதிலடி கொடுக்காத ரஜினிகாந்த், கமல்ஹாசன் | மானை வலையில் சிக்க வைத்த புயல் | சிவகார்த்திகேயன் படத்தில் கருணாகரன் |
'இன்று நேற்று நாளை' படத்தின் இயக்குநர் ரவிகுமார், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கவிருக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். '24 AM STUDIOS' நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.
இந்த படத்திற்கான நடிகர், நடிகை தேர்வு நடைபெற்றுவரும் நிலையில் காமெடியன் கேரக்டருக்கு சதீஷை சிபாரிசு செய்துள்ளார் சிவகார்த்திகேயன். சதீஷை பயன்படுத்த இயக்குநர் ரவிகுமாருக்கு விருப்பமில்லை. தன்னுடைய முதல் படமான 'இன்று நேற்று நாளை' படத்தில் நடித்த கருணாகரன் தான் நடிக்க வேண்டும் என்பதில் ரவிகுமார் உறுதியாக இருந்திருக்கிறார்.
அதனால், கருணாகரனே காமெடி ரோல் பண்ண உள்ளார். முதன்முறையாக சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பணியாற்றுகிறார் கருணாகரன்.
இந்த விவகாரம் தொடர்பாக சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் ரவிகுமாருக்கும் இடையில் ஏற்பட்ட சின்ன புகைச்சல் இன்னும் அணையவில்லை என்பதுதான் லேட்டஸ்ட் நியூஸ்.