அவரை காணும் வரை எந்த கிருஷ்ணனையும் தரிசிக்க மாட்டேன் : யேசுதாஸ் | வெப் சீரியலில் நடிப்பது ஏன்? பாபி சிம்ஹா | ஷாலினி இடத்தை பிடிக்க விரும்பும் ஸ்வாதிஷ்டா | புதுமுகங்கள் நடிக்கும் தேவகோட்டை காதல் | இந்திய அழகியுடன் உலகம் சுற்றும் மஹத் | தெலுங்கு தொகுப்பாளினி ராதிகா ரெட்டி தற்கொலை | இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் மறைவிற்கு முதல்வர் இரங்கல் | திரையுலக பேரணி ரத்து? | பிரபாகரன் கதை படமாகிறது | கர்நாடக சொத்துக்களை விற்க ரஜினி முடிவு? |
நடிகர் ரஜினிக்கு, ஏராளமான சொத்துக்கள் கர்நாடகாவில் பல்வேறு பகுதிகளிலும் உள்ளன. பெங்களூருவிலும் வீடு உள்ளிட்ட பல சொத்துக்கள் உள்ளன.
இதனாலேயே, காவிரி பிரச்னை வரும்போதெல்லாம், ரஜினி கொஞ்சம் அடக்கியே வாசித்து வந்தார். ஆனாலும், அவ்வப்போது, அமைதியாக பெங்களூருக்கு சென்று, தன்னுடைய வீட்டில் பல நாட்கள் தங்கியிருந்துவிட்டு, சென்னைக்கு திரும்புவது ரஜினியின் வாடிக்கையாக இருந்தது.
இந்நிலையில், அவர் புதிய கட்சித் துவங்கப் போவதாக அறிவித்து, காவிரி பிரச்னைக்கு ஒரே தீர்வு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுதான் என, டுவீட் மூலம் தனது கருத்தை தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியம், எக்காரணம் கொண்டும் அமைக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் கர்நாடக அரசியல் கட்சிகளும், கன்னட அமைப்புகளும், இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
ரஜினி, எப்போது கர்நாடகத்துக்கு வந்தாலும், அவருக்கு கருப்புக் கொடி காட்டப்படும் என்பதோடு, அவருடைய படங்களை கர்நாடகத்தில் இனி, ஓட விட மாட்டோம் என்றும் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து, கர்நாடகாவில் இருக்கும் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் விற்று விடலாமா என்கிற யோசனையில் ரஜினி ஆழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது. சொத்துக்களுக்காக மட்டுமே கர்நாடகத்துக்கு செல்லும் நிலையை மாற்றி விட முடியும் என்பதாலேயே இப்படி யோசிப்பதாக தெரிகிறது.