'கம்மார சம்பவம்' ஆடியோவை வெளியிட்ட நிவின்பாலி | மேகா ஆகாஷுக்கு தனுஷ் வாங்கித்தந்த மோசமான ஐஸ்கிரீம் | மம்முட்டி பட ஷூட்டிங்கில் இணைந்தார் ராய் லட்சுமி | கழுதை குளியல் - ஒட்டக சவாரி : அசத்தும் ஜெயராம் | யுவன் ஷங்கர் ராஜாவின் கார் திருடப்பட்டதா? | காவிரி, ஸ்டெர்லைட் : நடிகர் சங்கமும் போராட்டம் | தொடரும் பன்னீர்செல்வம், செல்வமணி மோதல் | பதிலடி கொடுக்காத ரஜினிகாந்த், கமல்ஹாசன் | மானை வலையில் சிக்க வைத்த புயல் | சிவகார்த்திகேயன் படத்தில் கருணாகரன் |
கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இந்தப்படத்தில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். துருக்கியில் ஒரு மாண்டேஜ் பாடல் காட்சியை படமாக்கிய கௌதம் மேனன், தனுஷ்-மேகா இருவரையும் சாலையில் இயல்பாக பேசிக்கொண்டே நடப்பது போலவும் அப்போது அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை இயல்பாக செய்யும்படியும் காட்சியை விளக்கினாராம்.
கேமரா சுழல ஆரம்பித்ததும் தனுஷும் மேகாவும் நடக்க ஆரம்பித்தார்களாம். வழியில் இருந்த ஐஸ்கிரீம் வண்டியில் இருந்து, தனுஷ் பச்சை நிற பிளேவரில் இரண்டு ஐஸ்கிரீம் வாங்கி, ஆளுக்கொன்றாக சுவைக்க ஆரம்பித்தார்களாம். ஆனால் அவ்வளவு மட்டமான சுவையில் இதுவரை அவர்கள் ஐஸ்கிரீம் சாப்பிட்டதே இல்லையாம்.
ஆனாலும் கேமரா ஓடிக்கொண்டு இருப்பதை உணர்ந்து இருவருமே ஐஸ்கிரீமை சுவைத்து சாப்பிடுவது போல நடித்தார்களாம். இயக்குனர் கட் சொன்னவுடன் இருவரும் ஓடிச்சென்று அந்த ஐஸ்கிரீமை வாந்தி எடுக்காத குறைதானாம். எதற்காக அந்த பச்சைநிற ஐஸ்கிரீமை வாங்கினீர்கள் என தனுஷிடம் மேகா கேட்க, என்னக்கென்ன தெரியும் குத்துமதிப்பாகத்தான் அதை தேர்ந்தெடுத்தேன் என்றாராம் தனுஷ். அதன்பின் மேகா வேறு ஒருநல்ல ஐஸ்கிரீமை வாங்கி சுவைத்து, தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாரம்.