மம்முட்டி பட ஷூட்டிங்கில் இணைந்தார் ராய் லட்சுமி | கழுதை குளியல் - ஒட்டக சவாரி : அசத்தும் ஜெயராம் | யுவன் ஷங்கர் ராஜாவின் கார் திருடப்பட்டதா? | காவிரி, ஸ்டெர்லைட் : நடிகர் சங்கமும் போராட்டம் | தொடரும் பன்னீர்செல்வம், செல்வமணி மோதல் | பதிலடி கொடுக்காத ரஜினிகாந்த், கமல்ஹாசன் | மானை வலையில் சிக்க வைத்த புயல் | சிவகார்த்திகேயன் படத்தில் கருணாகரன் | அட்லீயின் பிலீங்ஸ் | விக்ரம் படம் : ஸ்ருதிக்கு பதில் அக்ஷ்ரா |
ரவி அரசு இயக்கியுள்ள 'ஐங்கரன்', பாண்டிராஜ் தயாரித்துள்ள 'செம', டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் இயக்கியுள்ள 'குப்பத்து ராஜா' ஆகிய படங்களை அடுத்து பிரபல ஒளிப்பதிவாளர், ராஜீவ்மேனன் இயக்கும் 'சர்வம் தாளமயம்' உட்பட பல படங்களில் நடித்து வருகிறார் ஜிவி.பிரகாஷ்குமார்.
மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் பல வருட இடைவெளிக்குப் பிறகு இயக்கும் படம் இது. இவரது இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் 'சர்வம் தாள மயம்' படத்தின் படப்பிடிப்பு விருமாண்டி, மும்பை எக்ஸ்பிரஸ் படங்களைப் போல முழுக்க முழுக்க லைவ் சிங்க் சவுண்ட் என்கிற நேரடி ஒலிப்பதிவு முறையில் படமாக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியிடம் இதற்கான ஆலோசனைகளைப் பெற்று படப்பிடிப்பு நடத்தியுள்ளார் ராஜிவ்மேனன். முழு படப்பிடிப்பும் நேரடி ஒலிப்பதிவு முறையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஜி.வி,பிரகாஷ் ஜோடியாக, அபர்னா பாலமுரளி நடித்திருக்கிறார்.
இருவரது காம்பினேஷன் காட்சிகள் மிகுந்த பாராட்டைப்பெறும் என்கிறது படக்குழு. ஜி.வி.பிரகாஷின் 'செம' படத்தை அடுத்து இப்படம் ரிலீஸ் செய்ய படக்குழு தீர்மானித்துள்ளது.