பதிலடி கொடுக்காத ரஜினிகாந்த், கமல்ஹாசன் | மானை வலையில் சிக்க வைத்த புயல் | சிவகார்த்திகேயன் படத்தில் கருணாகரன் | அட்லீயின் பிலீங்ஸ் | விக்ரம் படம் : ஸ்ருதிக்கு பதில் அக்ஷ்ரா | அனிருத் சொன்னது உண்மையா ? | காளி-யை நம்பும் அம்ரிதா | ரசூல் பூக்குட்டியிடம் ஆலோசனைப் பெற்ற ராஜிவ் மேனன் | அவரை காணும் வரை எந்த கிருஷ்ணனையும் தரிசிக்க மாட்டேன் : யேசுதாஸ் | வெப் சீரியலில் நடிப்பது ஏன்? பாபி சிம்ஹா |
தமிழ்நாட்டில் நடைபெறும் அரசியல் விவகாரங்களுக்கும், மத்தியில் நடைபெறும் விவகாரங்களுக்கும் மட்டுமே தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள் புதிய அரசியல்வாதிகளான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். அவர்களது படங்களை கர்நாடகாவில் திரையிட மாட்டோம் என்று அறிவித்த கன்னட சலவாளி தலைவர் வாட்டாள் நாகராஜ் கருத்துக்கு இருவரும் பதில் கருத்து தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறார்கள்.
ஒரு ஜனநாயக நாட்டில் அவர்களது படங்களை வெளியிட மாட்டோம் என ஒரு கன்னட அமைப்பின் தலைவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரையும் நேரடியாகவே மிரட்டுகிறார். ஆனால், அது பற்றி எதுவும் சொல்லாமல் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் அமைதியாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது.
வெளிப்படையாக பதில் கொடுத்தால் எங்கே பழையபடி மன்னிப்பு கேட்டுவிட வேண்டிய சூழ்நிலை உருவாகுமோ என ரஜினிகாந்த் தரப்பு யோசித்திருக்கலாம். அவருக்கு அடுத்தடுத்து 'காலா, 2.0' ஆகிய படங்கள் வெளியீட்டிற்குக் காத்திருக்கின்றன. கமல்ஹாசனும் அடுத்து 'விஸ்வரூபம் 2' படத்தை வெளியிட உள்ளார்.
கமல்ஹாசன், ரஜினிகாந்திற்கு ஆதரவாக திரையுலகத்தைச் சேர்ந்த எந்த சங்கங்களும் இதுவரை எதுவும் சொல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவராக, கர்நாடகாவைச் சேர்ந்த பிரகாஷ் ராஜ் இருக்கிறார். மத்திய அரசைப் பார்த்து அடிக்கடி கேள்வி கேட்பவர், அவர் மாநிலத்துக்காரர் பேசிய பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்காமல் இருக்கிறார்.