மம்முட்டியின் கை வண்ணத்தில் | 'கம்மார சம்பவம்' ஆடியோவை வெளியிட்ட நிவின்பாலி | மேகா ஆகாஷுக்கு தனுஷ் வாங்கித்தந்த மோசமான ஐஸ்கிரீம் | மம்முட்டி பட ஷூட்டிங்கில் இணைந்தார் ராய் லட்சுமி | கழுதை குளியல் - ஒட்டக சவாரி : அசத்தும் ஜெயராம் | யுவன் ஷங்கர் ராஜாவின் கார் திருடப்பட்டதா? | காவிரி, ஸ்டெர்லைட் : நடிகர் சங்கமும் போராட்டம் | தொடரும் பன்னீர்செல்வம், செல்வமணி மோதல் | பதிலடி கொடுக்காத ரஜினிகாந்த், கமல்ஹாசன் | மானை வலையில் சிக்க வைத்த புயல் |
கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷ்னல் பட நிறுவனம் கமல் நடித்த படங்கள் தவிர்த்து பிற ஹீரோக்கள் நடித்த படங்களையும் அவ்வப்போது தயாரித்துள்ளது. அடுத்தப்படியாக விக்ரம் நடிக்கும் படம் ஒன்றையும் தயாரிக்க உள்ளது.
கமல்ஹாசனிடம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் உதவியாளராகப் பணியாற்றிய ராஜேஷ் எம் செல்வா, இந்தப் படத்தை இயக்க உள்ளார். 'தூங்காவனம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், இயக்கும் இரண்டாவது படம் இது.
இந்தப் படத்தில், விக்ரமுக்கு ஜோடியாக அக்ஷரா ஹாசன் நடிக்க உள்ளார். முதலில் ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்கவே முயற்சி நடந்திருக்கிறது. ஆனால் ஸ்ருதிஹாசன் நடிக்க மறுத்துவிட்டாராம்.
அதன் பிறகே கமலின் இளைய மகள் அக்ஷராவை, விக்ரம் ஜோடியாக நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார் கமல்.