இந்திய அழகியுடன் உலகம் சுற்றும் மஹத் | தெலுங்கு தொகுப்பாளினி ராதிகா ரெட்டி தற்கொலை | இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் மறைவிற்கு முதல்வர் இரங்கல் | திரையுலக பேரணி ரத்து? | பிரபாகரன் கதை படமாகிறது | கர்நாடக சொத்துக்களை விற்க ரஜினி முடிவு? | தெலுங்கில் கால்பதித்த ஜஸ்டின் பிரபாகரன் | மீண்டும் ஒரு வெற்றிப் படத்தில் சமந்தா | ஆடையின்றி போஸ் கொடுத்த பிரபல நடிகை | 'மாரி-2'வில் வில்லனுக்கு இரண்டு கெட்டப் |
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறவர் மஹத். வெங்கட்பிரபு பார்ட்டி அணியில் முக்கியமானவர். வெங்கட்பிரபு இயக்கிய மங்காத்தா, பிரியாணி, சென்னை 28 இரண்டாம் பாகம், விஜய் நடித்த ஜில்லா, சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
டாப்ஸி நடிக்க வந்த புதிதில் அவரது நெருக்கமான நண்பராக இருந்தவர். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க ஆரம்பித்தார்கள். ஒரு பார்ட்டியில் பிரச்னை வர மஹத்தை விட்டு பிரிந்தார் டாப்ஸி. தற்போது மஹத் 2012ம் ஆண்டில் மிஸ் இண்டியா எர்த் டைட்டில் வென்ற பிராச்சி மிஸ்ராவை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிராச்சி மிஸ்ரா துபாயைச் சேர்ந்தவர். அவரது குடும்பம் அங்கு பல்வேறு தொழில்களை செய்து வருகிறது. அவ்வப்போது இந்தியாவுக்கு வந்து ஹிந்திப் படங்களில் நடித்துவிட்டு போவார் பிராச்சி மிஸ்ரா.
இருவரும் தீவிரமாக காதலிப்பதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியா நாட்டில் இருவரும் ஜாலியா ஊர்சுற்றுவதும், பார்ட்டிகளில் கலந்து கொண்டு ஆடுவதும் மாதிரியான படங்கள் இணையதளங்களில் வெளியாகி இருவரும் காதலிப்பதை உறுதி செய்கிறது. ஆனால் காதல் பற்றி இருவரும் வெளிப்படையாக எதையும் பேசவில்லை.