யுவன் ஷங்கர் ராஜாவின் கார் திருடப்பட்டதா? | காவிரி, ஸ்டெர்லைட் : நடிகர் சங்கமும் போராட்டம் | தொடரும் பன்னீர்செல்வம், செல்வமணி மோதல் | பதிலடி கொடுக்காத ரஜினிகாந்த், கமல்ஹாசன் | மானை வலையில் சிக்க வைத்த புயல் | சிவகார்த்திகேயன் படத்தில் கருணாகரன் | அட்லீயின் பிலீங்ஸ் | விக்ரம் படம் : ஸ்ருதிக்கு பதில் அக்ஷ்ரா | அனிருத் சொன்னது உண்மையா ? | காளி-யை நம்பும் அம்ரிதா |
பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸ். கிறிஸ்துவராக இருந்தபோதிலும் இந்து மதத்தில் நம்பிக்கை உடையவர். ஏராளமான பக்தி பாடல்களையும் பாடியிருக்கிறார். இவரின் ஹரிவராசனம் பாடல் தான் சபரிமலையில் ஒலிக்கிறது. சபரிமலையில் இவருக்கு தரிசனம் செய்ய அனுமதி உண்டு.
குருவாயூர் கிருஷ்ணனுக்காக யேசுதாஸ் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார். ஆனால் இந்த கோவிலில் இவருக்கு அனுமதி கிடையாது. வேற்று மதத்தினருக்கு இந்த கோவிலில் அனுமதி கிடையாது.
இந்நிலையில் திருச்சூரில், விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் யேசுதாஸ். அவர் பேசியதாவது...
குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நான் நுழைய சிறப்பு அனுமதி கோரவில்லை. என்னை அனுமதிப்பது பற்றி கோவில் நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும். விலக்கப்பட்டவர்களை அனுமதிக்கும் வரை கண்டிப்பாக என்னை அனுமதிக்க போவது இல்லை. உண்மையாக கடவுளை நேசித்து தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் போது அதில் கடைசி ஆளாக நான் இருப்பேன்.
குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் என்னை அனுமதிக்கும் வரை வேறு எந்த கிருஷ்ணன் கோவிலையும் நான் தரிசிக்க போவது கிடையாது. நண்பருடன் உடுப்பி கிருஷ்ணன் கோவிலுக்கு சென்றபோது கூட அங்கு இருந்தவர் கிருஷ்ணராக தெரியவில்லை, ராமராகத்தான் பார்த்தேன்.
வேதங்களை அனைவரும் கற்கும்போது இந்த உலகத்தில் அமைதி பிறக்கும். வேதம் என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தினுள் போய் சிக்க கூடாது என்பது என் கருத்து.
இவ்வாறு யேசுதாஸ் பேசினார்.