'மாரி-2'வில் வில்லனுக்கு இரண்டு கெட்டப் | 'ஒடியன்' பட இசையில் சாம் சி.எஸ்ஸின் புதிய முயற்சி | தனி வாரியம் : ஸ்டிரைக் முடியுமா ? | நயன்தாராவுக்கு திருமணம் - உண்மையா ? | கமல்ஹாசன், ரஜினிகாந்த் - எதிர்ப்புகளை சமாளிப்பார்களா ? | சமந்தா படப்பிடிப்புக்கு அனுமதி உண்டா ? | விஜய்சேதுபதி படம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? | சினிமாவுக்கு தனி வாரியம் : விஷால் நன்றி | 2 பாகங்களாகும் என்டிஆரின் வாழ்க்கை வரலாறு படம்! | ரஜினிக்கு 78-வது இடம் |
தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரோகினி பன்னீர்செல்வம் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அனுப்பிய வாட்ஸ்-அப் ஆடியோவில் கியூப் கட்டணத்தை செலுத்த மாட்டோம். இந்த போராட்டத்தில் நாம் உறுதியாக இருப்போம் வெற்றி நமக்குத்தான் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்து பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி விடுத்துள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
கியூப் சினிமா திரையரங்கு உரிமையாளர்களிடம் வாங்கும் பணத்தில் ஒரு சில திரையரங்கு உரிமையாளர்களுக்கு மட்டும் திருப்பி கொடுக்கிறார்களே அது உங்களுக்கு தெரியுமா?, எல்லா உறுப்பினர்களுக்கும் அப்படி கொடுக்கிறார்களா?, அதுபற்றி நீங்கள் கேட்டதுண்டா?. மேலிருக்கும் ஐந்தாரு பேருக்கு மட்டும் பணம் கொடுத்து விட்டு மற்றவர்களை ஏமாற்றியிருக்கிறார்களே அதுபற்றி எப்போதாவது நீங்கள் கேட்டதுண்டா?.
தியேட்டரில் உள்ள கியூப் புரொஜக்டர்களின் விலை என்ன என்று தெரியுமா?. இதுவரை தியேட்டர்கள் கட்டிய பணத்தை கணக்கிட்டால் அது அவர்களுக்கு சொந்தமாகி இருக்க வேண்டுமே அதுபற்றி நீங்கள் கேட்டதுண்டா?. இப்போது கியூபுக்கு பணம் கட்டவேண்டாம் என்கிறீர்கள். கியூப் நிறுவனத்துடன் தியேட்டர் அதிபர்கள் போடும் ஒப்பந்தத்தை நீங்கள் படித்ததுண்டா?. அது எவ்வளவு பெரிய அடிமை சாசனம் என்பதும், அதிலிருந்து வெளிவர முடியாமல் தியேட்டர்காரர்கள் தவிப்பதும் உங்களுக்கு தெரியுமா?.
தியேட்டர்களில் கியூப் உரிமையாளர்கள் திரையிடும் விளம்பரங்களின் வருமானம் தியேட்டர் அதிபர்களுக்கு வருகிறதா என்பதை நீங்கள் கவனித்தது உண்டா? நிறைய தியேட்டர் உரிமையாளர்கள் விளம்பர பணம் எங்களுக்கு வருவதில்லை என்கிறார்கள். அப்படியென்றால் மேலிருக்கிற ஒரு சிலர் மட்டும் அதனை பெற்றுக் கொள்கிறார்களா? தியேட்டர் உரிமையாளர்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் பதவியில் இருந்து கொண்டு இப்போது பணம் கட்டாதீர்கள் என்கிறீர்கள், சினிமா நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அல்லது கியூப் நிறுவனம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
7 லட்சம் ரூபாய் பதிப்புள்ள புரொஜக்டரை கொடுத்துவிட்டு 25 லட்சம் ரூபாய் வரை வசூலித்திருக்கிறார்கள் என்ற உண்மையை தியேட்டர் அதிபர்களுக்கு சொல்லியிருக்கிறீர்களா? தயாரிப்பாளர்கள் தான் கியூப்புக்கு பணம் கட்டுகிறார்கள் என்றாலும் கியூப் புரொஜக்டர் தியேட்டருக்கு சொந்தமாகியிருக்க வேண்டுமே இதை எடுத்துச் சொல்லியிருக்கிறீர்களா?
இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.