புதுடில்லி : கடந்த, 10 ஆண்டுகளில், மிக மோசமாக பாதிக்கப்பட்ட பார்லிமென்ட் கூட்டத் தொடராக, தற்போது நடந்து வரும் பட்ஜெட் கூட்டத் தொடர் அமைந்துள்ளது. இந்த கூட்டத் தொடரின் போது, லோக்சபாவில், 25 சதவீத பணிகளே நடந்தன; அலுவல் பாதிப்பால், 190 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தாண்டில், பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்டம், ஜன., 29ல் துவங்கி, பிப்., 9 வரை நடந்தது. இரண்டாம் கட்ட, பட்ஜெட் கூட்டத் தொடர், மார்ச், 5ல் துவங்கி, ஏப்., 6 வரை நடக்கிறது. இந்த கூட்டத் தொடர், கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், மிக மோசமான பாதிப்புகளை சந்தித்ததாக அமைந்து உள்ளது.
லோக்சபாவில், பட்ஜெட் கூட்டத் தொடரில், 22 அமர்வுகள் நிகழ்ந்தன. இந்த சமயத்தில், 25 சதவீத அலுவல்கள் மட்டுமே நடந்தன; ராஜ்யசபாவில், 35 சதவீத அலுவல்கள் நடந்துள்ளன.
மறைமுக செலவுகள்:
பாதிப்பு:
நம்பிக்கை இல்லா தீர்மானங்கள், பார்லி.,யில் நிகழ்ந்த தொடர் அமளிகளால் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. வங்கி மோசடி தவிர, காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதற்கான கோரிக்கை ஆகியவற்றால், பட்ஜெட் கூட்டத் தொடர் கடுமையாக பாதிக்கப்பட்டது.
அலுவல்களை பொறுப்புடன் நிறைவேற்ற வேண்டிய, எம்.பி.,க்கள், இரு சபைகளையும் தொடர்ந்து முடக்கி வந்த போதிலும், அவர்களின் சம்பளம் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்தபடி செல்கிறது. லோக்சபாவில், எம்.பி.,க்கள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கான செலவு, பிற செலவினங்கள் என, ஒரு ஆண்டுக்கு, ஆகும் செலவு, 656 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது; ராஜ்யசபாவில், இந்த செலவுகள், 384 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து