தெலுங்கில் கால்பதித்த ஜஸ்டின் பிரபாகரன் | மீண்டும் ஒரு வெற்றிப் படத்தில் சமந்தா | ஆடையின்றி போஸ் கொடுத்த பிரபல நடிகை | 'மாரி-2'வில் வில்லனுக்கு இரண்டு கெட்டப் | 'ஒடியன்' பட இசையில் சாம் சி.எஸ்ஸின் புதிய முயற்சி | தனி வாரியம் : ஸ்டிரைக் முடியுமா ? | நயன்தாராவுக்கு திருமணம் - உண்மையா ? | கமல்ஹாசன், ரஜினிகாந்த் - எதிர்ப்புகளை சமாளிப்பார்களா ? | சமந்தா படப்பிடிப்புக்கு அனுமதி உண்டா ? | விஜய்சேதுபதி படம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? |
விஜய் சேதுபதியின் பண்ணையாரும் பத்மினியும் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜஸ்டின் பிரபாகரன். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளரான இவர், தற்போது நாடோடிகள் 2, ஒத்தைக்கு ஒத்த உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், அர்ஜூன் ரெட்டி படம் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா நடிக்கும் தெலுங்கு படத்திற்கு இசையமைக்க உள்ளார். இது ஜஸ்டினின் முதல் தெலுங்கு படமாகும். இப்படத்தை பரத் கம்மா இயக்குகிறார். இவரும், ஜஸ்டினும் ஏற்கனவே ஒரு குறும்படத்தில் பணியாற்றி உள்ளனர்.