மீண்டும் ஒரு வெற்றிப் படத்தில் சமந்தா | ஆடையின்றி போஸ் கொடுத்த பிரபல நடிகை | 'மாரி-2'வில் வில்லனுக்கு இரண்டு கெட்டப் | 'ஒடியன்' பட இசையில் சாம் சி.எஸ்ஸின் புதிய முயற்சி | தனி வாரியம் : ஸ்டிரைக் முடியுமா ? | நயன்தாராவுக்கு திருமணம் - உண்மையா ? | கமல்ஹாசன், ரஜினிகாந்த் - எதிர்ப்புகளை சமாளிப்பார்களா ? | சமந்தா படப்பிடிப்புக்கு அனுமதி உண்டா ? | விஜய்சேதுபதி படம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? | சினிமாவுக்கு தனி வாரியம் : விஷால் நன்றி |
விக்ரம் வேதா ரிலீஸுக்கு பிறகு கவனிக்கத்தக்க இசையமைப்பாளராக மாறிவிட்டார் சாம் சி.எஸ். தற்போது மோகன்லால் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகிவரும் 'ஒடியன்' படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
ஒடியன் ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட பிரதேசத்தில் நடக்கும் ஒரு திரில்லர் கதை என்பதால் கேரளாவின் பழங்கால புராதான இசைக்கருவிகளை உபயோகிக்கலாம் என்ற யோசனை சாமுக்கு தோன்றியதாம். மேலும் இந்தப்படம் பிளாக் மேஜிக் மற்றும் வசியம் ஆகியவற்றை உள்ளடக்கியதாம்.
“வழக்கமாக மூங்கில் இசைக்கருவி என்றால் அது ப்ளூட் தான். ஆனால் 6 அடி நீள மூங்கில் இசைக்கருவி ஒன்று அழகான வசியத்துக்காக பயன்படுகிறது. அதை இசைக்க தெரிந்த வயதான பெண் ஒருவரை வைத்து இசைத்து, படத்திற்கு பயன்படுத்திக் கொண்டோம்” என்கிறார் சாம் சி.எஸ்.
இன்னும் முழுமையாக படப்பிடிப்பை நடத்தி முடிப்பதற்கு முன்பே சில காட்சிகளுக்கு இசையமைத்து, ஒட்டு மொத்த ஒடியன் படக்குழுவையும் கவர்ந்து விட்டாராம் சாம் சி.எஸ்.