'மாரி-2'வில் வில்லனுக்கு இரண்டு கெட்டப் | 'ஒடியன்' பட இசையில் சாம் சி.எஸ்ஸின் புதிய முயற்சி | தனி வாரியம் : ஸ்டிரைக் முடியுமா ? | நயன்தாராவுக்கு திருமணம் - உண்மையா ? | கமல்ஹாசன், ரஜினிகாந்த் - எதிர்ப்புகளை சமாளிப்பார்களா ? | சமந்தா படப்பிடிப்புக்கு அனுமதி உண்டா ? | விஜய்சேதுபதி படம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? | சினிமாவுக்கு தனி வாரியம் : விஷால் நன்றி | 2 பாகங்களாகும் என்டிஆரின் வாழ்க்கை வரலாறு படம்! | ரஜினிக்கு 78-வது இடம் |
தமிழ்த் திரையலகத்தில் ஒரு மாத காலமாக புதிய படங்கள் வெளியீடு இல்லாமல் தியேட்டர்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. திரைப்படம் பார்க்கும் ஒரு பொழுதுபோக்கையே தமிழ் ரசிகர்கள் ஏறக்குறைய மறந்துவிட்டார்கள். இதிலிருந்தே தமிழ் ரசிகர்கள் தமிழ்ப் படங்களைத்தான் அதிகம் விரும்புகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். மற்ற மொழிப் படங்களுக்கு மிஞ்சிப் போனால் இரண்டு நாட்கள் மட்டுமே இங்கு வசூலை ஈட்ட முடியும்.
கடந்த வாரம் தயாரிப்பாளர் சங்கம் மற்ற சங்க நிர்வாகிகளுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது திரையுலகத்திற்கென்று தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். தேவைப்பட்டால் அப்படி ஒரு வாரியம் அமைக்கப்பட்டு திரையுலகப் பிரச்சினை தீர்த்து வைக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு, தூத்துக்குடியில் தெரிவித்துள்ளார்.
அதற்கு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார். அப்படி ஒரு வாரியம் அமைக்கப்படும் பட்சத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஸ்டிரைக் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது. அரசு உடனடியாக அமைக்கவில்லை என்றாலும், விரைவில் அமைப்போம் என்று சொன்னாலே திரையுலகினர் ஸ்டிரைக்கை வாபஸ் பெறவும் முடியும். அதற்கான தீர்வை விரைவில் எட்டினால் இந்தத் தொழிலில் உள்ள தொழிலாளிகளுக்கும், பணம் முதலீடு செய்யும் முதலாளிகளுக்கும் விடிவுகாலம் பிறக்கும்.
காவிரி மண்சார்ந்த மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் தேவை காவிரி மேலாண்மை வாரியம். தமிழ்க் கலைஞர்களுக்குத் தேவை திரையுலக வாரியம். இரண்டு வாரியமும் இனிதே அமைந்தால் சிறப்பு.