மீண்டும் ஒரு வெற்றிப் படத்தில் சமந்தா | ஆடையின்றி போஸ் கொடுத்த பிரபல நடிகை | 'மாரி-2'வில் வில்லனுக்கு இரண்டு கெட்டப் | 'ஒடியன்' பட இசையில் சாம் சி.எஸ்ஸின் புதிய முயற்சி | தனி வாரியம் : ஸ்டிரைக் முடியுமா ? | நயன்தாராவுக்கு திருமணம் - உண்மையா ? | கமல்ஹாசன், ரஜினிகாந்த் - எதிர்ப்புகளை சமாளிப்பார்களா ? | சமந்தா படப்பிடிப்புக்கு அனுமதி உண்டா ? | விஜய்சேதுபதி படம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? | சினிமாவுக்கு தனி வாரியம் : விஷால் நன்றி |
ஒரு படத்தின் வெற்றி என்பது பொதுவாக படத்தின் ஹீரோக்களுக்கும், படத்தை இயக்குனருக்கும் மட்டுமே போய்ச் சேரும். சில சமயங்களில் மட்டுமே படத்தில் நடித்துள்ள நாயகி மற்றும் மற்றவர்களுக்கும் போய்ச் சேரும்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. அவருக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. இருந்தாலும் தொடர்ந்து படங்களில் நடத்திக் கொண்டிருக்கிறார்.
திருமணம் முடிந்த பிறகு சமந்தா நடித்து தெலுங்கில் வெளிவந்த 'ராஜு காரி கதி 2' படம் தோல்வியடைந்தது. அதே சமயம் தமிழில் வெளிவந்த 'மெர்சல்' படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்போது அவர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'ரங்கஸ்தலம்' தெலுங்குப் படமும் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. வெளியான மூன்று நாட்களில் சுமார் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரிய லாபத்தைக் கொடுக்கும் என டோலிவுட்டில் சொல்கிறார்கள்.
தான் நடித்துள்ள படங்களில் அதிக வெற்றிகளைக் கைவசம் வைத்திருக்கும் நடிகைகளில் சமந்தா முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். அடுத்து அவர் நடித்து வெளிவர உள்ள படங்களும் வழக்கமான மசாலாப் படங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.