கமல்ஹாசன், ரஜினிகாந்த் - எதிர்ப்புகளை சமாளிப்பார்களா ? | சமந்தா படப்பிடிப்புக்கு அனுமதி உண்டா ? | விஜய்சேதுபதி படம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? | சினிமாவுக்கு தனி வாரியம் : விஷால் நன்றி | 2 பாகங்களாகும் என்டிஆரின் வாழ்க்கை வரலாறு படம்! | ரஜினிக்கு 78-வது இடம் | ரஷ்யாவில் குடியேறுகிறார் ஸ்ரேயா | சாதனை நாயகி ஸ்ருதிஹாசன் | வேங்கையன் மவன் ஒத்தையில நிக்கேன் : ஹாலிவுட் படத்தில் ரஜினியின் பஞ்ச் டயலாக் | சினிமாவில் கவனம் செலுத்தும் இமான் அண்ணாச்சி |
தமிழில் சிங்கம்-3, தெலுங்கில் கட்டமராயுடு படங்களுக்குப்பிறகு சபாஷ் நாயுடு படத்தில் நடித்தார் ஸ்ருதிஹாசன். அந்தப்படம் பாதியில் நிற்கிறது. அதன்பிறகு சில காலம் எந்த படங்களிலும் கமிட்டாகாத அவர், தனது இத்தாலி பாய் பிரண்ட் மைக்கேல் கோர்சலுடன் திருமண வதந்திகளில் சிக்கியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது கத்தி படத்தில் விஜய்யுடன் மோதிய பாலிவுட் வில்லன் வித்யுத் ஜம்வாலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
டுவிட்டரில் ஆக்டீவாக இருந்து வந்த ஸ்ருதிஹாசனை ஏராளமானோர் பாலோ செய்து வந்தனர். அந்த வகையில், நேற்று ஏப்ரல் 1-ம் தேதியோடு ஸ்ருதிஹாசனை டுவிட்டரில் பின்தொடரும் நபர்களின் எண்ணிக்கை 7 மில்லியன் ஆகியுள்ளது.
அந்த வகையில், தென்னிந்திய நடிகைகளில் அதிக டுவிட்டர் பாலோவர்களை கொண்ட முதல் நடிகை என்கிற சாதனையை செய்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.