பழம்பெரும் ஒளிப்பதிவாளரின் பரிதாபம்: மாரடைப்பில் இறந்தவர் அநாதை பிணமாக ஆஸ்பத்திரியில் கிடந்தார் | கியூப் கட்டணத்தை கட்ட மாட்டோம்: தயாரிப்பாளர்கள் உறுதி | டிராபிக் ராமசாமியில் பரபரப்பு காட்சி? | ஸ்டெர்லைட் போராட்ட களத்தில் சரத்குமார் | தமிழ்நாட்டிற்குள் பிறமொழிப் படங்கள் அணிவகுப்பு - விஷால் அடுத்தக்கட்ட நடவடிக்கை | இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் காலமானார் | ராஜமவுலி படத்தில் டாக்டர் ராஜசேகர் நடிக்கவில்லை | ரகசியத்தைக் காப்பாற்றாத அமிதாப் பச்சன் | அர்னால்டுக்கு இதயத்தில் ஆபரேஷன் | அடக்க அடக்க போராட்டம் வலுக்கும் : கமல் |
பழம்பெரும் திரைப்பட போட்டோகிராபர் திருச்சி ஆனா ரூனா. நடிகர் திலகம் சிவாஜியின் ஆஸ்தான போட்டோகிராபர். இவரது மகன்கள் ரமேஷ்குமார், சுரேஷ்குமார். இருவரும் சினிமா ஒளிப்பதிவாளர்கள். சுரேஷ்குமார் கடமை கண்ணியம் கட்டுப்பாடு, என் தமிழ் என் மக்கள் உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். புனே திரைப்படக் கல்லூரியில் தங்கமெடல் பெற்ற மாணவர்.
விபத்து ஒன்றில் சிக்கி உடல் பாதிப்படைந்த சுரேஷ்குமாருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் குறும்படங்கள், டாக்குமெண்டரி படங்களில் பணியாற்றி வந்தார். திருமணம் செய்து கொள்ளாத சுரேஷ்குமார் குரோம்பேட்டையில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 27ந் தேதி கோடம்பாக்கம் வந்து விட்டு இரவில் குரோம்பேட்டை திரும்பிய சுரேஷ்குமார், பஸ்சில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு சாலையோரத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். இதனை யாரும் கவனிக்கவில்லை. பிறகு அந்தப் பக்கம் வந்த மர்ம நபர்கள் சுரேஷ்குமாரின் சட்டைப்பையில் இருந்த பணம், வங்கி ஏடிஎம் கார்டுகள், ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர். இதனால் அவர் யார் என்று தெரியவில்லை. பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரது உடல் 4 நாட்கள் வைக்கப்பட்டிருந்தது. பின்னார் சுரேஷ்குமார் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் அவரை காணவில்லை என்று கொடுத்த தகவலின் பேரில் மருத்துவமனையில் இருந்த சுரேஷ்குமார் உடல் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று மாலை அவரது இறுதி சடங்குகள் நடந்தது. இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.