நான் நடிகன் என்பதை விட தமிழன் : கமல் | சமந்தாவை ஆச்சர்யப்படுத்திய ஷில்பா விஜய சேதுபதி | இந்த ஆண்டில் தீபிகா -ரன்வீர் திருமணம் | 2 மொழிகளில் ஒளிபரப்பாகும் பாகுமதி | தேசிய கட்சியில் பிரகாச ராஜா | கர்நாடக தேர்தலில் போட்டியிடுகிறார் சுமலதா | இனி குடியும் இல்லை, பகடியும் இல்லை: சிவகார்த்திகேயன் முடிவு | பழம்பெரும் ஒளிப்பதிவாளரின் பரிதாபம்: மாரடைப்பில் இறந்தவர் அநாதை பிணமாக ஆஸ்பத்திரியில் கிடந்தார் | கியூப் கட்டணத்தை கட்ட மாட்டோம்: தயாரிப்பாளர்கள் உறுதி | டிராபிக் ராமசாமியில் பரபரப்பு காட்சி? |
பிரபல நடிகை சுமலதா. திசை மாறிய பறவைகள், முரட்டுக்காளை, அழைத்தால் வருவேன், கழுகு, கரையெல்லாம் செண்பகப்பூ, எனக்காக காத்திரு, குடும்பம் ஒரு கதம்பம், ஒரு ஓடை நதியாகிறது உள்பட ஏராளமான தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்., தென்னிந்திய மொழிகளில் 100 படங்களுக்கு மேல் நடித்தவர். கன்னட படங்களில் நடித்தபோது உடன் நடித்த நடிகரும், அரசியல்வாதியுமான அம்ரீஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அம்ரீஷ் மத்திய மாநில அமைச்சரவையில் இடம்பெற்றார். கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியல் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது கர்நாடக சட்டபை தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த முறை அம்ரேஷ் போட்டியிட முடியாத அளவிற்கு அவரது உடல்நிலை தளர்ந்து விட்டது. இதன் காரணமாக அம்ரீசுக்கு பதிலாக மாண்டியா தொகுதியில் வேறொருவரை நிறுத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. அதற்கு சம்மதிக்காத அம்ரீஷ் தனக்கு பதிலாக தனது மனைவி சுமலதாவை நிறுத்துமாறு கேட்டிருக்கிறார். இதற்கு கட்சி மேலிடமும் ஒப்புதல் அளித்திருக்கிறது. இதனால் சுமலதா வருகிற தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது.