மிகப்பெரிய சம்பளத்துடன் தெலுங்கில் நுழையும் புருவ அழகி | நைஜீரிய நடிகர் சம்பள விவகாரம் ; தயாரிப்பாளர் விளக்கம் | நடிகர் சங்க தலைவராக இனி போட்டியிட மாட்டேன் : இன்னொசன்ட் | நான் நடிகன் என்பதை விட தமிழன் : கமல் | சமந்தாவை ஆச்சர்யப்படுத்திய ஷில்பா விஜய சேதுபதி | இந்த ஆண்டில் தீபிகா -ரன்வீர் திருமணம் | 2 மொழிகளில் ஒளிபரப்பாகும் பாகுமதி | தேசிய கட்சியில் பிரகாச ராஜா | கர்நாடக தேர்தலில் போட்டியிடுகிறார் சுமலதா | இனி குடியும் இல்லை, பகடியும் இல்லை: சிவகார்த்திகேயன் முடிவு |
கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான 'சூடானி ப்ரம் நைஜீரியா'.. சக்காரியா என்கிற அறிமுக இயக்குனர் இயக்கிய இந்தப்படத்தில் நைஜீரியா நாட்டை சேர்ந்த சாமுவேல் ஆப்ரஹாம் என்கிற நடிகர் கிட்டத்தட்ட கதையின் நாயகனாக நடித்திருந்தார். இவரது நடிப்பிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
சமீபத்தில் நைஜீரியா திரும்பிய சாமுவேல், இந்தப்படத்தின் தயாரிப்பாளர்கள் நிற வேற்றுமை காரணமாக தன்னை கீழாக நடத்தினார்கள் என்றும் சாதாரண பிரபலமாகாத நடிகர்களுக்கு வழங்கிய சம்பளத்தை விட நாயகனாக நடித்த தனக்கு குறைவான சம்பளத்தை கொடுத்தார்கள் எனவும் வேதனையுடான் குறிப்பிட்டிருந்தார்..
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளரான ஷிஜு காலியத் சாமுவேலின் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், “சாமுவேல் எங்களது சம்பள ஒப்பந்தத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுதான் படத்தில் நடித்தார்... அவருக்கு பேசிய தொகை முழுவதையும் முன்கூட்டியே கொடுத்து விட்டோம். படம் வெளியாகி வெற்றிபெற்று லாபம் வரும் பட்சத்தில் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீத பங்கு சாமுவேல் உட்பட இன்னும் சில நடிகர்களுக்கும் தருவதாக சொல்லியிருந்தோம்..
இதோ இப்போது படம் நன்றாக ஓடுகிறது. ஆனால் அதன் கணக்கு வழக்குகள் எங்கள் கைகளுக்கு வந்துசேர கொஞ்ச காலம் ஆகும். ஆனால் சாமுவேல் அதற்குள் எங்க மீது இப்டி குற்றம் சாட்டியிருப்பது வருத்தமளிக்கிறது. இருந்தாலும் அவரது மனவருத்ததை போக்கி, அவருக்கு சேரவேண்டியத்தை சேர்ப்போம்” என கூறியுள்ளார் ஷிஜு காலியத்.