பழம்பெரும் ஒளிப்பதிவாளரின் பரிதாபம்: மாரடைப்பில் இறந்தவர் அநாதை பிணமாக ஆஸ்பத்திரியில் கிடந்தார் | கியூப் கட்டணத்தை கட்ட மாட்டோம்: தயாரிப்பாளர்கள் உறுதி | டிராபிக் ராமசாமியில் பரபரப்பு காட்சி? | ஸ்டெர்லைட் போராட்ட களத்தில் சரத்குமார் | தமிழ்நாட்டிற்குள் பிறமொழிப் படங்கள் அணிவகுப்பு - விஷால் அடுத்தக்கட்ட நடவடிக்கை | இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் காலமானார் | ராஜமவுலி படத்தில் டாக்டர் ராஜசேகர் நடிக்கவில்லை | ரகசியத்தைக் காப்பாற்றாத அமிதாப் பச்சன் | அர்னால்டுக்கு இதயத்தில் ஆபரேஷன் | அடக்க அடக்க போராட்டம் வலுக்கும் : கமல் |
விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் கதையின் நாயகனாக நடித்து வரும் படம் டிராபிக் ராமசாமி. சமூக சேவகர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரனுடன் பிரகாஷ்ராஜ், விஜயசேதுபதி, விஜய் ஆண்டனி, எஸ்.வி.சேகர், சீமான், ரோகினி உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தில் டிராபிக் ராமசாமியாக நடித்துள்ள விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன், கிளைமாக்ஸ் காட்சியில் தனது அரசியல் வாரிசாக விஜய்யை காண்பித்து அவர் ஒரு மாடர்ன் காந்தி என்று கூறுவது போன்ற காட்சி இடம்பெற்றிருப்பதாக டிராபிக் ராமசாமியின் உதவியாளர் பாத்திமா என்பவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஆனால் இந்த செய்தியை டிராபிக் ராமசாமி படத்தின் இயக்குனர் விக்கி மறுத்துள்ளார். பாத்திமா கூறுவது போன்று இந்த படத்தில் எந்த காட்சியும் இல்லை. முழுக்க முழுக்க டிராபிக் ராமசாமி என்கிற சமூக சேவகரைப்பற்றிய கதை இது. அதனால் இந்த படத்தில் அரசியல், வாரிசு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.