கமல்ஹாசன், ஷாரூக் சந்திப்பு | தமிழ்ப் படங்களின் இடத்தைப் பிடித்த 'ரங்கஸ்தலம்' | பும்ரா ஸ்டைல் பிடிக்கும்: ராக்ஷி | ஈ.சி.ஆரில் மெர்சல் பார்ட்டி | கால்பந்தாட்ட வீரர்களைத் தேடும் சுசீந்திரன்! | காலாவுக்கு யு/ஏ சான்றிதழ்? | இளம் ஹீரோக்களுடன் கைகோர்க்கும் தெலுங்கு சீனியர்கள்..! | ஏப்-5க்கு தள்ளிப்போனது மம்முட்டியின் 'பரோல்' | கோலமாவு கோகிலாவின் கதை என்ன? | சின்னத்திரையில் வேலைக்காரன் |
தெலுங்கில் சுமார் முப்பது வருடமாக திரையுலகில் தங்களது இடத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்கும் ஹீரோக்கள் தான் நாகார்ஜூனா, வெங்கடேஷ் ஆகியோர். இதில் சிரஞ்சீவியும் இந்த இடத்தில் மீண்டும் வந்து சேர்ந்து கொண்டுள்ளார். ஆனால் இந்தமுறை தனி ஒருவனாக களம் காண நினைக்காமல், இளைய தலைமுறை ஹீரோக்களுடன் கைகோர்த்துள்ளனர்..
அந்தவகையில் தற்போது சிரஞ்சீவி நடித்து வரும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் விஜய்சேதுபதி முக்கிய வேடத்தில் அடித்து வருகிறார். வெங்கடேஷ் நடித்து வரும் 'எப்-2' படத்தில் இளம் நடிகர் வருண் தேஜ் நடிக்கிறார். அதேபோல நாகார்ஜூனா நடிக்கும் படத்தில் நானி இன்னொரு ஹீரோவாக நடித்து வருகிறார். இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களை, சீனியர் நடிகர்கள் தங்கள் வசம் தக்கவைக்கும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.