ரகசியத்தைக் காப்பாற்றாத அமிதாப் பச்சன் | அர்னால்டுக்கு இதயத்தில் ஆபரேஷன் | அடக்க அடக்க போராட்டம் வலுக்கும் : கமல் | காவிரி வாரியம் : நடிகர் சங்கம் போராட்டம் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் | அட்லிக்கு எதிராக திரளும் தயாரிப்பாளர்கள் | நயன்தாராவின் அழுத்தமான பதிவு | ரஜினிகாந்துக்கு பலத்த செக்யூரிட்டி | கதாநாயகர்களை அச்சுறுத்தும் சாயிஷா சாய்கல் | விஜய் ரசிகராக ஜி.வி.பிரகாஷ் குமார் |
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், இந்திய சினிமாவில் இந்த டிஜிட்டல் உலகத்தில் ஒவ்வொரு படக்குழுவினரும் அவர்களது படங்களைப் பற்றிய விஷயங்களை மிகவும் ரகசியமாக காத்துக் கொண்டு வருகிறார்கள். சிலர் படத்தின் தலைப்பையே பட வெளியீட்டிற்கு முன்னர் அறிவிக்கும் அளவிற்கு அனைத்தையும் ரகசியமாக வைத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், தெலுங்கில் முதல் முறையாக அமிதாப்பச்சன் நடிக்கும் 'சை ரா' படத்தையும் அப்படித்தான் ஆரம்பித்தார்கள். படத்தில் சிரஞ்சீவி எப்படி இருப்பார், நயன்தாரா எப்படி இருப்பார், அமிதாப் எப்படி இருப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அனைத்தையும் தன்னுடைய ஒரு டுவீட்டால் ரகசியத்தை வெளியில் விட்டுவிட்டார் அமிதாப்.
அவருடைய டுவிட்டரில் சிரஞ்சீவி, நயன்தாரா, அவருடைய தோற்றம் என ஒரு காட்சியில் அவர்கள் நடிக்கும் படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டார். படக்குழுவினர் திகைத்துப் போயிருக்கிறார்கள்.