வடசென்னையில் அமீரின் மனைவியாக ஆண்ட்ரியா | தெலுங்கு சினிமாவை கலக்கும் ஸ்ரீலீக்ஸ் | திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ருதிஹாசன் | சாணக்யன் ஆக வெளிவரும் மம்முட்டியின் மாஸ்டர்பீஸ் | கதாசிரியரின் மகனை இயக்குனர் ஆக்கினார் மம்முட்டி | ஒரே ஒரு படத்துடன் முடிவடையும் மார்ச் மாதம் | எதிர்ப்பை மீறி படப்பிடிப்பை முடிக்கும் விஜய் சேதுபதி | ரஜினிக்கும், கமலுக்கும் கடும் போட்டி | அமெரிக்க படவிழாவில் மெர்குரி | டுவிட்டரில் முதலிடத்தில் மோகன்லால்..! |
சுந்தர்.சி இயக்கும் சங்கமித்ரா படத்தில் லீடு ரோலில் நடிக்க கமிட்டாகியிருந்தார் ஸ்ருதிஹாசன். கேன்ஸ் திரைப்பட விழாவில் நடந்த அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அதோடு, அந்த சரித்திர படத்திற்கு தேவையான சண்டை பயிற்சிகளிலும் சில மாதங்களாக அவர் ஈடுபட்டு வந்தார். ஆனால் திடீரென்று அந்த படத்தில் இருந்து வெளியேறினார் ஸ்ருதிஹாசன்.
ஆனால் அதன்பிறகு தனது தந்தை கமல் நடித்து வந்த சபாஷ்நாயுடு படத்தில் மட்டுமே நடித்த ஸ்ருதிஹாசனுக்கு புதிதாக படங்கள் ஒப்பந்தமாகவில்லை. இதனால் அவர் தனது பாய் பிரண்டை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுவார் என்றுதான் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன.
இந்த நேரத்தில் இந்தியில் மகேஷ் மஞ்ரேக்கர் இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் ஸ்ருதிஹாசன். வித்யுத்ஜாம்வால் நாயகனாக நடிக்கும் இந்த படம் ரொமான்டிக் ஆக்சன் கதையில் உருவாகிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.