அரசு வேடிக்கை பார்ப்பது புரியாத புதிராக உள்ளது : ரஜினி | ரகுல் பிரீத் சிங் - மாதவி லதா கருத்து மோதல் | நோலனிடம் மன்னிப்புக் கேட்டேன் : கமல் | வடசென்னையில் அமீரின் மனைவியாக ஆண்ட்ரியா | தெலுங்கு சினிமாவை கலக்கும் ஸ்ரீலீக்ஸ் | திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ருதிஹாசன் | சாணக்யன் ஆக வெளிவரும் மம்முட்டியின் மாஸ்டர்பீஸ் | கதாசிரியரின் மகனை இயக்குனர் ஆக்கினார் மம்முட்டி | ஒரே ஒரு படத்துடன் முடிவடையும் மார்ச் மாதம் | எதிர்ப்பை மீறி படப்பிடிப்பை முடிக்கும் விஜய் சேதுபதி |
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் சமீபத்தில் ரஜினி கூறிய கருத்திற்கு கன்னட ரசிகர்கள் கடும் எதிர்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக ரஜினி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களா அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்து வரும் போராட்டத்தில் நாளை (ஏப்ரல் 01) பங்கேற்க உள்ளதாக சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகர் கமல் கூறி இருந்தார். இந்நிலையில் ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக ரஜினியும் பதிவிட்டுள்ளார்.
ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களா அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது #SterliteProtest
— Rajinikanth (@rajinikanth) March 31, 2018